பழிக்கு பழி... 300 முதலைகளை வெட்டிச் சாய்த்த கிராம மக்கள்!

இந்தோனேசியாவில் உறவினரை கடித்துக் கொன்ற முதலையைப் பழிவாங்கும் எண்ணத்தில், 300-க்கும் மேற்பட்ட முதலைகளை ஒரு கும்பல் வெட்டிச் சாய்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

பழிக்கு பழி... 300 முதலைகளை வெட்டிச் சாய்த்த கிராம மக்கள்!

இந்தோனேசியாவில் உறவினரை கடித்துக் கொன்ற முதலையைப் பழிவாங்கும் எண்ணத்தில், சுமார் 300 முதலைகளை ஒரு கும்பல் வெட்டிச் சாய்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் பப்புவாவில் சோராங் நகரில் மிகப்பெரிய முதலைப் பண்ணை உள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இருப்பதால், இந்தப் பண்ணையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் பண்ணையாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் பண்ணையின் உரிமையாளர் செவி சாய்க்கவில்லை. 

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் பண்ணைக்கு அருகே இருக்கும் புல்வெளிப்பகுதியில் தனது கால்நடைகளுக்கு சுகிட்டோ (48 வயது ) என்பவர், புற்கள் அறுத்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஒரு முதலை வந்து சுகிட்டோவின் காலைக் கடித்துள்ளது. அங்கிருந்து தப்பிக்க, சுகிட்டோ முதலைப் பண்ணைக்குள் ஓடியபோது, மற்ற முதலைகள் அவரைத் கடித்துக் கொன்றன. இதன் விவரம் அறிந்து சுகிட்டோ உறவினர்கள்போலீஸில் புகார் செய்து, பண்ணை நிர்வாகத்திடம் பேசினார்கள். இதில் பண்ணை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி போலீஸிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். பேச்சுவார்த்தையின்போது, முதலையின் தாக்குதலால் பலியான சுகிட்டோவுக்கு இழப்பீடு தருவதாக பண்ணை உரிமையாளர் ஒப்புக்கொண்டார்.

இதனிடையே சுகிட்டோவின் இறுதிச்சடங்கு முடித்த பின், கத்தி, போன்ற ஆயுதங்களுடன் புறப்பட்ட அப்பகுதி மக்கள், முதலைப்பண்ணைக்குள் புகுந்து அங்கிருந்த 300-க்கும் மேற்பட்ட முதலைகளை வெட்டிச் சாய்த்து செய்தனர். ஊழியர்கள் தடுத்தும், கேட்காத அவர்கள், தங்களின் உறவினரை கடித்துக் குதறிய முதலைகளை பழிக்குப்பழிவாங்கும் வகையில், இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர்.  இதில் சிறிய முதலை முதல் பெரியது வரை 300 முதலைகள் பலியானது. 

இது குறித்து பண்ணை நிர்வாகம் சார்பில் போலீஸிடம் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்ட போலீஸார், முதலைகள் கொல்லப்பட்டு குவியலாகக் கிடக்கும் காட்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அந்தப் பகுதி மக்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தகுந்த ஆதாரம் கிடைத்துள்ளதால் சோராங் பகுதி மக்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP