இலங்கையில் 6 அமைச்சர்கள் பதவி விலகல்: அமைச்சரவையில் விரைவில் மாற்றம்

இலங்கையில் கூட்டணி ஆட்சியில் இருக்கும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வாக்களித்த அமைச்சர்கள் 6 பேர் பதவி விலகியுள்ளனர். இதனால் விரையில் அங்கு அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட உள்ளது.
 | 

இலங்கையில் 6 அமைச்சர்கள் பதவி விலகல்: அமைச்சரவையில் விரைவில் மாற்றம்

இலங்கையில் 6 அமைச்சர்கள் பதவி விலகல்: அமைச்சரவையில் விரைவில் மாற்றம்இலங்கையில் கூட்டணி ஆட்சியில் இருக்கும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வாக்களித்த அமைச்சர்கள் 6 பேர் பதவி விலகியுள்ளனர். இதனால் விரையில் அங்கு அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட உள்ளது. 

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் சுதந்திரக் கட்சியும் பிரதமரான ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி ஆட்சி நடத்துகின்றன. இருத் தரப்புக்கும் இடையே சமீபகாலமாக மோதல் இருந்து வருகிறது.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சி கூட்டணி படுதோல்வி அடைந்தது. முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி அமோக வெற்றி பெற்றது. 

இந்த தோல்விக்கு ரணில் விக்ரமசிங்கே தான் காரணம் என அதிபர் சிறிசேனா கட்சியினர் குற்றம் சாட்டினார்கள். அந்த கட்சியின் பல அமைச்சர்களும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்மரசிங்கே மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் ரணில் விக்மரசிங்கே வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார்.

சிறிசேனா கட்சியை சேர்ந்த 12 அமைச்சர்கள், பிரதமருக்கு எதிராக வாக்கெடுப்பில் செயல்பட்டனர். 6 அமைச்சர்கள் உள்பட 16 எம்.பி.க்கள் எதிர்த்து ஓட்டுபோட்டனர். பலர் வாக்கெடுப்பை புறக்கணித்தனர்.

இதனால் அதிருப்தி அடைந்த விக்மரசிங்கே, எதிர்த்து வாக்களித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அதிபர் சிறிசேனாவிடம் வற்புறுத்தி வருகிறார்.  இந்த நிலையில் 6 அமைச்சர்களும் பதவி விலகியுள்ளனர். இதனால் இன்னும் ஓரிரு நாளில் மந்திரிசபையில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP