30 ஆண்டுகளுக்கு பிறகு ராஜினாமா செய்தார் கஜகஸ்தான் அதிபர்

கடந்த 30 ஆண்டுகளாக கஜகஸ்தான் நாட்டின் அதிபராக செயல்பட்டு வந்த நுர்சுல்தான் நசர்பயேவ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். புதிய தலைவர்களுக்கு வழிவகுப்பதற்காகவே தான் விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 | 

எண்ணெய் வளம் மிகுந்த கஜகஸ்தான் நாட்டின் அதிபராக கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தவர் நசர்பயேவ். சோவியத் யூனியன் காலத்திலிருந்தே அதிபராக செயல்பட்டு வந்த இவர், அந்நாட்டு மக்களால் 'தந்தை' என அன்போடு அழைக்கப்படுபவர். அவரது கீழ் கஜகஸ்தானில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. சமீபகாலத்தில் புதிய நலத்திட்டங்கள் மற்றும் அரசியல் மாற்றங்களுக்கான  நடவடிக்கைகள் எடுத்து வந்தார் நசர்பயேவ். இந்த நிலையில், திடீரென தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

 புதிய தலைவர்களுக்கும் வழிவகுத்து அரசியலிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் ரஷ்ய அதிபர் புடினுக்கு நெருக்கமான இவர், 2020ல் தனது பதவிக் காலம் முடியும் வரை தனக்கு வேண்டிய ஒருவரை அதிபராக இருக்க வைத்து, முக்கிய பொறுப்புகளை தொடர்ந்து தன்வசம் வைத்துக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP