படம் பேசுது: தூக்கி வீசும் முன் யோசியுங்களேன்!

பிளாஸ்டிக் பயன்பாட்டின் கேடினை பல வகைகளில் சந்தித்து வருகிறோம். இருப்பினும் அது அன்றாட வாழ்வில் அழையாத விருந்தாளியாகவும் தவிர்க்க முடியாத வேண்டாத நண்பனாகவும் ஊடுருவி கேடு விளைவித்துக் கொண்டே இருக்கிறது.
 | 

படம் பேசுது: தூக்கி வீசும் முன் யோசியுங்களேன்!

பிளாஸ்டிக் பயன்பாட்டின் கேடினை பல வகைகளில் சந்தித்து வருகிறோம். இருப்பினும் அது அன்றாட வாழ்வில் அழையாத விருந்தாளியாகவும் தவிர்க்க முடியாத வேண்டாத நண்பனாகவும் ஊடுருவி கேடு விளைவித்துக் கொண்டே இருக்கிறது.

ஆனால் மனிதவியலின் தேவைக்காக கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக், நமது கண்ணுக்குத் தெரியாத நுண்உயிர்களையும் பாதித்து வருகிறது என்பது நமக்கு தெரிந்தும், என்ன செய்துவிட முடியும் என்றபடி அது குறித்த செய்திகளை வாசித்து மேற்போக்குத் தனத்துடன் கடந்து செல்கிறோம். ஆனால் பிளாஸ்டிக்கால் உயிரிழந்த திமிங்கலத்தின் படம் ஒன்று வெளியாகி சர்வதேச நாடுகளை சஞ்சலம் கொள்ள செய்துள்ளது. 

இந்தோனேசிய கடற்கரை ஒன்றில் கரைஒதுங்கிய திமிங்கிலத்தின் சடலத்தில் 13 பவுண்ட் அதாவது சுமார் 6 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்துள்ளன.  

இந்தோனேசியாவின் சுலாவெசித் தீவின் அருகே வக்காடோபி தேசியப் பூங்கா உள்ளது. இங்கு கடந்த திங்கள்கிழமை (19 ஆம் தேதி) 31 அடி நீளமுள்ள திமிங்கிலம் கரை ஒதுங்கியது. அதன் வயிற்றில் 115 பிளாஸ்டிக் கப்புகள் 25 பிளாஸ்டிக் பைகள், 4 பிளாஸ்டிக் பாட்டில்கள் உட்பட சுமார் 6 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது தெரிய வந்தது. இதனை அதன் வயிறு ஜீரணிக்க முடியாமல், ஆயிரம் பிளாஸ்டிக் துண்டுகளாக சிக்கி இருந்துள்ளன. 

இதன் பாதிப்பால் இறந்த அந்த திமிங்கலத்தின் படம் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலில் சென்று கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் கடல்வாழ் உயிரினங்களை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதற்கு இந்த ப் படமே சாட்சி. 

 

 

கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் பெரும்பாலான விழுக்காடு ஐந்து நாடுகளால் உருவாக்கப்படுவதாகச் 

சர்வதேச கடல் பாதுகாப்பு அமைப்பு ஒன்றின் தகவல்படி, சீனாவை அடுத்து இந்தோனேசியா தான் பிளாஸ்டிக் குப்பைகளை கடலில் கலப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்தத் வரிசையில் உள்ளன. இந்த நாடுகள் ஆண்டு தோறும் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் கலக்கின்றதாம். 

சில மாதங்களுக்கு முன்பு தான் இதே போல, தாய்லாந்தில் குட்டித் திமிங்கலம் இறந்து கரை ஒதுங்கியது. அதன் வயிற்றில் சுமார்  80 பிளாஸ்டிக் குப்பைகள் இருந்ததை கண்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்ணீர் விட்டனர். சர்வதேச நாடுகளும் தனி நபர் ஒவ்வொரு வரும் இது குறித்து சிந்திக்காவிடில், இதே நிலை நீடித்து கடல்வாழ் உயிரினங்கள் படிப்படியாக அழிவைச் சந்தித்து கடலில் மீனவர்கள் செல்லும் ஒரு நாள் பிளாஸ்டிக் குப்பைகள் மட்டுமே அகப்படும் நாள் வந்துவிடும். 

தொடர்புடையவை

பிளாஸ்டிக் பைகளை விழுங்கியதால் உயிரிழந்த குட்டி திமிங்கலம்!

டென்மார்க்கில் திமிங்கலங்களை கொல்லும் திருவிழா: கடலே ரத்த வெள்ளமாக கலங்கடிக்கும் காட்சிகள்

இறந்த குட்டியை 2 வாரம் சுமந்த தாய் திமிங்கலம்! நெஞ்சை உருக்கும் சம்பவம்

 Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP