பிலிப்பைன்ஸ்: மங்குட் புயல் பலி எண்ணிக்கை 81 ஆக உயர்வு!

பிலிப்பைன்ஸ் நாட்டை கடுமையாக தாக்கிய மங்குட் புயலால் பலியானோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 70 பேர் மாயமாகியுள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் மற்றும் ஹாங் காங் பகுதிகள் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டன.
 | 

பிலிப்பைன்ஸ்: மங்குட் புயல் பலி எண்ணிக்கை 81 ஆக உயர்வு!

பிலிப்பைன்ஸ் நாட்டை கடுமையாக தாக்கிய மங்குட் புயலால் பலியானோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 70 பேர் மாயமாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் மங்குட் புயல் தாக்கியதில், பிலிப்பைன்ஸ் மற்றும் ஹாங் காங் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பிலிப்பைன்ஸின் வடக்கு தீவான லூஸானை, இந்த புயல் முழுவதும் தாக்கியது. இதனால் பலியானோர் எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளது. 70க்கும் மேற்பட்டோரை காணவில்லை. நிலச்சரிவால் 31 சுரங்க தொழிலாளர்களுடன் ஒரு வீடு இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

பிலிப்பைன்ஸில் மட்டும் மங்குட் புயலால் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர், அங்குள்ள கோர்டில்லரா எனும் ஊரை சேர்ந்தவர்கள். சுரங்கத் தொழிலாளர்கள் 39 பேர் இங்கு மட்டும் இறந்துள்ளதாக தெரிகிறது. மேலும், இட்டகோன் எனும் ஊரிலும் நிலச்சரிவுகளால் பல சுரங்கங்கள் மூடப்பட்டன. அங்கு சட்ட விரோதமாக தங்கியிருந்த பல தொழிலாளர்கள், இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP