மாலத்தீவு அதிபராக எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: முடிவை அறிவிப்பதில் இழுபறி

மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 58.3 சதவிகித வாக்குகள் பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 | 

மாலத்தீவு அதிபராக எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: முடிவை அறிவிப்பதில் இழுபறி

மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 58.3 சதவிகித வாக்குகள் பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

மாலத்தீவில் 1192 குட்டித்தீவுகள் உள்ளன. சில காலமாக அங்கு அரசியல் நெருக்கடி நிலவுகிறது. இந்த நிலையில் அங்கு ஞாயிறு அன்று அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது.  இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் யாமீன் அப்துல் கயூம், மாலத்தீவு முன்னேற்ற கட்சி சார்பிலும்  அவரை எதிர்த்து இலங்கையில் வசித்து வருகிற முன்னாள் அதிபர் முகமது நஷீத், மாலத்தீவு ஜனநாயக கட்சி சார்பிலும் போட்டியிட விரும்பினார். ஆனால் பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகியதையடுத்து அவரது கட்சி சார்பில் இப்ராகிம் முகமது போடியிட்டார்.

இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு 92 சதவிகித வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிவான உடன் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், 58.3 சதவிகித வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. 

இதனை அடுத்து மாலத்தீவு ஜனநாயக கட்சியை சேர்ந்த தொண்டர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். எனினும், தேர்தல் முடிவு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக ஒரு வார காலம் ஆகும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் கட்சிகள் ஒரு வார காலத்துக்குள் வழக்கு தொடரலாம். 

ஆனால் இந்த முறைக்கு, தற்போது வெற்றி பெற்றிருக்கும் எதிர்கட்சி அச்சம் தெரிவித்துள்ளது. தனது கருத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளை கைது செய்து சிறையில் அடைத்தவர் யாமீன் அப்துல் கயூம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP