இணைகிறதா வடகொரியா - தென் கொரியா?

வடகொரியா - தென் கொரியா இணைய விருப்பம்
 | 

இணைகிறதா வடகொரியா - தென் கொரியா?


வடகொரிய மற்றும் தென் கொரிய நாடுகள் ஒன்றாக இணைய வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் ஊன் விருப்பம் தெரிவித்துள்ளார். 

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இரண்டாக பிரிந்த கொரிய தீபகற்பம், இன்று வரை ஒன்று சேராமலே உள்ளது. ஆண்டாண்டு காலமாக கிம் குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சியில் இருந்து வரும் வடகொரியாவுக்கும், ஜனநாயக ஆட்சியில் இருக்கும் தென் கொரியாவுக்கும் இடையே சமரசம் ஏற்படாமலே இருந்து வந்தது. 

சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதரவு கொண்ட வடகொரியா, அமெரிக்க ஆதரவு கொண்ட தென் கொரியாவை அடிக்கடி அச்சுறுத்தி வருகிறது. இந்த ஆண்டு தென் கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில், பகையை மறந்து வடகொரியா கலந்து கொள்ள அந்நாடு அழைப்பு விடுத்தது. அதை வடகொரியாவும் ஏற்றுக் கொண்டது. மேலும், இரு நாட்டின் ஒலிம்பிக்ஸ் வீரர்களும், சேர்ந்து ஒரே கொரிய கொடியின் கீழ் அணிவகுப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், ராணுவ ரீதியாகவும் தென் - வடகொரியா பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது, இரு நாடுகளையும் இணைத்து ஒரே கொரியாவாக மாற்ற வடகொரியா விருப்பம் தெரிவித்துள்ளது. அந்நிய சக்திகள், இரண்டு நாடுகளையும் சேர விடாமல் செய்வதாகவும், "அந்த சக்திகளை வேரோடு அழிப்போம்; இரண்டு நாடுகளையும் ஒன்றாக இணைப்போம்" என வடகொரியா தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. 

உலகம் முழுவதும் உள்ள கொரிய மக்கள், இரு நாடுகளையும் ஒன்றாக சேர வலியுறுத்த வேண்டும் என்றும் கிம் அழைப்பு விடுத்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP