வடகொரியா - தென் கொரியா பேச்சுவார்த்தை வெற்றி

நேற்று தென் கொரிய பிரதிநிதிகளை வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஊன் சந்தித்தார். இந்த சந்திப்பு நல்ல முடிவுக்கு வந்ததாகவும், தென் கொரிய அரசு உச்சி மாநாடு நடத்த விடுத்த அழைப்பை கிம் ஏற்றுள்ளதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது.
 | 

வடகொரியா - தென் கொரியா பேச்சுவார்த்தை வெற்றி

வடகொரியா - தென் கொரியா பேச்சுவார்த்தை வெற்றி

நேற்று தென் கொரிய பிரதிநிதிகளை வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஊன் சந்தித்தார். 

இந்த சந்திப்பு நல்ல முடிவுக்கு வந்ததாகவும், தென் கொரிய அரசு உச்சி மாநாடு குறித்து நடத்திய பேச்சுவார்த்தைக்கு அதிபர் கிம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது.

"தென் கொரிய பிரதிநிதிகள் இன்று அதிபர் கிம் ஜாங் ஊனை சந்தித்தனர். அப்போது அவர்கள் கொரிய உச்சி மாநாடு குறித்து தங்களது நிபந்தனைகளை வைத்தனர். இறுதியில் இரு தரப்பும் சுமூகமான முடிவுக்கு வந்தன" என வடகொரிய அரசு தொலைக்காட்சி கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் இரு நாடுகளும் கடும் மோதலில் இருந்த நிலையில், தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை ஒட்டி, தென் கொரியா வடகொரியாவுக்கு அழைப்பு விடுத்தது. வடகொரியா மற்றும் தென் கொரிய வீரர் வீராங்கனைகள் ஒன்றாக சேர்ந்து ஒன்றிணைந்த கொரியா கொடியை ஏந்தி நடந்து வந்தனர். 

வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஊனின் தங்கை, ஒலிம்பிக்ஸ் போட்டிகளை பார்க்க வந்திருந்தார். அப்போது அவர் தென் கொரிய அதிபர் மூனை சந்தித்து, கொரிய உச்சி மாநாடு நடத்த வலியுறுத்தினார். ஆனால், உச்சி வடகொரியாவில் நடத்தப்படும் உச்சி மாநாட்டில் தான் கலந்துகொள்ள வேண்டுமென்றால், சில நிபந்தனைகளுக்கு வடகொரியா ஒத்துக்கொள்ள வேண்டும் என மூன் கூறியதாக தெரிகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP