சமாதான நிகழ்ச்சியை ரத்து செய்தது வடகொரியா

சமாதான நிகழ்ச்சியை ரத்து செய்தது வடகொரியா
 | 

சமாதான நிகழ்ச்சியை ரத்து செய்தது வடகொரியா


குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு முன்னதாக ஒரு கலாச்சார நிகழ்ச்சியில் தென் கொரியாவுடன் வடகொரியா கலந்துகொள்ள இருந்த நிலையில், அதை வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் ஊன் திடீரென ரத்து செய்துள்ளார்.

தென் கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியில், வடகொரியா கலந்து கொள்வதாக கூறியதோடு, தென் கொரியாவுடன் சேர்ந்து தங்களது வீரர்கள் அணிவகுப்பு செய்வார்கள் என்றும் தெரிவித்தது. கடந்த சில வருடங்களாக கடும் பகையில் இருந்த இரு நாடுகளும், இந்த நிகழ்ச்சியின் மூலம் நெருக்கமாக திட்டமிட்டு வந்தன. 

ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு முன், வடகொரியா மற்றும் தென் கொரியா சேர்ந்து ஒரு கலாச்சார நிகழ்வில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், திடீரென அந்த நிகழ்ச்சியில் தங்கள் நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்ளப் போவதில்லை என வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் ஊன் தெரிவித்துள்ளார். 

தன்னை தவறாக விமர்சித்து தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வருவதன் காரணமாக இந்த முடிவெடுத்துள்ளதாக கிம் கூறியுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP