நேபாள விமான விபத்து; 38 பேர் பலி

வங்கதேச பயணிகள் விமானம் நேபாளத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 70 பேர் பயணித்துள்ளனர்.
 | 

நேபாள விமான விபத்து; 38 பேர் பலி

நேபாள விமான விபத்து; 38 பேர் பலி

வங்கதேச பயணிகள் விமானம் இன்று நேபாளத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 38 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கதேச பயணிகள் விமானம் ஒன்று டாக்கா நகரில் இருந்து புறப்பட்டு நேபாளம்  சென்றது. நேபாளம் காத்மண்டு விமான நிலையத்தில் தரையிறங்க ஆயத்தமானது. அப்போது எதிர்பாராத விதமாக காத்மண்டு விமான நிலையத்தின் அருகில் உள்ள கால்பந்து மைதானத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் 70 பேர் பயணித்துள்ளனர். மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 38 பேர் பலியானதாகவும், 27 பேர்  காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

கீழே விழுந்த விமானம் தீப்பிடித்து எரிந்து வருவதால் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். விபத்து நிகழ்ந்ததையடுத்து காத்மண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP