மியான்மர் சுரங்க நிலசரிவில் 27 பேர் பலி

மியான்மர் நாட்டின் வடப் பகுதியில் உள்ள கச்சின் மாவட்ட மாணிக்கக் கல் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 27 பேர் பலியாகினர்.
 | 

மியான்மர் சுரங்க  நிலசரிவில் 27 பேர் பலி

மியான்மர் நாட்டின் வடப் பகுதியில் உள்ள கச்சின் மாவட்ட  மாணிக்கக் கல் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 27 பேர் பலியாகினர்.

மியான்மரில் மாணிக்கக் கல், தங்கம் போன்ற பல  இயற்கை வளங்களை வெட்டி எடுப்பதற்காக பல சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றது . இந்த சுரங்கங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு பலர் பலியாவது வழக்கம் .  கடந்த 2015ம் ஆண்டு, நவம்பரில் கச்சின் மாவட்ட சுரங்கத்தில் நடந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்த கச்சின் மாவட்ட மாணிக்க கல் சுரங்கத்துக்குள் சென்று மாணிக்க கற்களை வெட்டி எடுத்து வருவதற்காக, அங்குள்ள செட்-மூ என்ற கிராமத்தைச் சேர்ந்த ரவாங் என்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களை இந்தக் கொள்ளைக் கும்பல்கள் பயன்படுத்தி வருகின்றன. வழக்கம்போல் நேற்று காலை அந்த சுரங்கத்துக்குள் 27 தொழிலாளர்கள் மாணிக்க கற்களை வெட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பலத்த மழை பெயய்ததால் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவு மாணிக்க கல் சுரங்கத்தை முழுவதுமாக மூடியதனால் அந்த சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த 27 பேரும் உயிருடன் புதைந்தனர் என்ற தகவல் வெளியகாகியுள்ளது. இந்த தகவலறிந்தது மியான்மர் ராணுவத்தினரும், தீயணைப்புப் படையினரும் அங்கு விரைந்து சென்று தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் . ஆனால் கச்சின் மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் மீட்புப் பணி தாமதமாவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் சுரங்கத்துக்குள் புதைந்து பல மணிநேரம் ஆகிவிட்ட நிலையில் அவர்கள் உயிருடன் இருக்கும் வாய்ப்பு குறைவு என ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP