ஜப்பான் பிரதமருடன் ரோபோடிக் தொழிற்சாலைக்கு சென்ற மோடி!

ஜப்பான் சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபேவுடன் சேர்ந்து, ஜப்பானின் பிரபல ரோபோட்டிக் மற்றும் தானியங்கி தொழிற்சாலையை நேரில் பார்த்தார்.
 | 

இரு நாட்டு பேச்சுவார்த்தைக்காக ஜப்பான் சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபே, யாமநாஷி நகரில் வரவேற்றார். இருவரும் அந்நாட்டின் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். பின்னர், ஜப்பானின் பிரபல ரோபோட்டிக் தொழில்நுட்பம் கொண்டு முழுக்க இயங்கி வரும் FANUC தொழிற்சாலைக்கு அபேயுடன் மோடி சென்றார். அங்கு பயன்படுத்தப்பட்டு வரும் தானியங்கி தொழில்நுட்பங்கள் பற்றி பிரதமர் மோடி கேட்டறிந்தார். 

ஒரு மோட்டரை 40 வினாடிகளில் ஒருங்கிணைக்கும் ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை நேரில் பார்த்தார் மோடி. பின்னர், மோடிக்கு, அபே தனது யமனாஷி இல்லத்தில் வைத்து விருந்து அளித்தார். பிரதமர் மோடியுடன், அபே சுமார் 8 மணி நேரம் கழித்ததாக கூறப்படுகிறது. இது பிரதமர் மோடியின் 3வது ஜப்பான் பயணமாகும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP