Logo

கடல் அலையில் காணாமல் போன பெண்: 1.5 வருடத்துக்கு பின் அதே இடத்தில் மீட்பு

இந்தோனேசியாவில் 18 மாதத்துக்கு முன்பு கடலில் மூழ்கி மாயமான பெண், தந்தையின் உதவியோடு அதே கடல் பகுதியில் மீட்கப்பட்ட அதிசயம் நடந்துள்ளது.
 | 

கடல் அலையில் காணாமல் போன பெண்: 1.5 வருடத்துக்கு பின் அதே இடத்தில் மீட்பு

இந்தோனேசியாவில் 18 மாதத்துக்கு முன்பு கடலில் மூழ்கி மாயமான பெண், தந்தையின் உதவியோடு அதே கடல் பகுதியில் மீட்கப்பட்ட அதிசயம் நடந்துள்ளது. 

இந்தோனேசியா தீவான சுகாபூமியை சேர்ந்தவர் சுனாரிஷ் (வயது 53). இவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிட்டேபஸ் கடற்கரையில் குளித்து கொண்டு இருந்தபோது அவரை ராட்சத அலை இழுத்து சென்றுவிட்டது. அவரை தேடும் பணி பல நாட்களாக நடந்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசி வரை உடலும் கிடைக்கவில்லை. இதனால் அவர் இறந்ததாக கருதி இறுதி சடங்குகளை குடும்பத்தினர் செய்தும்விட்டனர். 

இந்த நிலையில் அவருடைய தந்தையின் கனவில் தோன்றிய சுனாரிஷ், தான் உயிரோடு இருப்பதாகவும், மூழ்கிய இடத்தில் தவிக்கும் தன்னை காப்பற்றும்படியும் கூறியுள்ளார். 

அனால் இதனை வேண்டாத கனவாக நினைத்த தந்தை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார். ஆனால், தொடர்ந்து அவருக்கு இவ்வாறு கனவு வந்தது. இதனால் தந்தையும், சுனாரிசின் சகோதரியும் அந்த பகுதிக்கு தேடி சென்றனர்.

நீண்ட நேரம் தேடிய நிலையில் அவர் கடலில் மூழ்கிய இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் மயங்கிய நிலையில் சுனாரிஷ் கிடந்தார். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிருடன் இருப்பது தெரிந்தது.  ஆனால், பேசக்கூடிய நிலையில் அவர் இல்லை. அதிர்ச்சியை தாண்டி வந்து சில நாட்களில் அவர் பேசுவார் என மருத்துவர்கள் உறுதி அளித்துள்ளனர். 

18 மாதங்கள் மயங்கிய நிலையில் உணவு, நீர் எதுவும் இல்லாமல் எப்படி உயிர் வாழா முடியும் என்பது மர்மமாக இருக்கிறது. ஆகவே, சுனாரிஷிடம் தெய்வ சக்தி இருப்பதாகவும் அதனால் தான் அவர் உயிருடன் வந்து விட்டார் என்றும் அந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள். இது குறித்து இந்தோனேசிய போலீசார் விசாரித்து வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP