Logo

ட்ரம்ப்புடன் சந்திப்பு: சிங்கப்பூர் சென்றார் கிம் ஜோங் உன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்தும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சிங்கப்பூர் சென்றடைந்தார்.
 | 

ட்ரம்ப்புடன் சந்திப்பு: சிங்கப்பூர் சென்றார் கிம் ஜோங் உன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்தும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சிங்கப்பூர் சென்றடைந்தார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் அவருக்கு இருந்த உறவு வேடிக்கையானது தான். ஆரம்பத்தில் கிம்மை 'குண்டு பையன்' என்றும் 'ராக்கெட் மேன்' என்று விமர்சித்த ட்ரம்ப், ஒரு கட்டத்தில், அணு ஆயுதங்களை கைவிடாவிட்டால் போர் மூளும் என்று மிரட்டல்கள் கூட விடுத்தார். கிம்மும் தன பங்குக்கு ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்தார்.

ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தென் கொரியாவில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் போது கிம் தனது அணுஆயுதங்களை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாகவும், சமாதான பேச்சுவார்த்தையை துவக்கவும் முயற்சி செய்தார். அதன்பின் இரு தரப்பும் சிங்கப்பூரில் உச்சகட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். இந்த பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த தென் கொரியா உதவி செய்தது. இடையில் தனது நிபந்தனைகளுக்கு அமெரிக்கா ஒத்துக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும் என கிம் கூறிய நிலையில் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. ஆனால், பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. 

ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொண்ட ட்ரம்ப், சிங்கப்பூர் கிளம்பியுள்ள நிலையில், கிம் சிங்கப்பூர் வந்தடைந்தார். அவரை சிங்கப்பூர்  வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார். சிங்கப்பூர் பிரதமரையும் ட்ரம்ப் மற்றும் கிம் சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP