கலவர பூமியானது மலேசியா... மாரியம்மன் கோவிலால் சர்ச்சை!

மலேசியாவில், 100 ஆண்டு பழமையான மகா மாரியம்மன் கோவிலை இடமாற்றம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து வன்முறை வெடித்தது. இதில், 18 கார்கள், 2 பைக்குகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
 | 

மலேசியாவின் சுபங் ஜெயா பகுதியில், 100 ஆண்டுகள் தொன்மையான மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை, வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக எழுந்த சர்ச்சையில், நேற்று இரண்டு பிரிவுகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. கோவிலை மாற்ற எதிப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பக்தர்கள் மீது, மற்றொரு கும்பல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. 

இதனால் வன்முறை வெடித்ததில், 18 கார்கள், 2 பைக்குகளுக்கு தீ வைக்கப்பட்டது. அந்த பகுதி முழுவதும் கலவர பூமியாக காட்சியளித்தது.  700க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சுபங் ஜெயாவில் நிறுத்தப்பட்டனர். கலவரத்தை 50 பேர் கொண்ட கும்பல் துவக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை 7 பேரை கைது செய்துள்ளதாகவும் மற்றவர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP