Logo

உலக அடையாளமாக மேக் இன் இந்தியா மாறியுள்ளது: ஜப்பானில் பிரதமர் மோடி பேச்சு

டிஜிட்டல் கட்டமைப்பு மேம்பாடு, மென்பொருள் வளர்ச்சியின் மையமாக திகழ்ந்து என பல மாற்றங்களை இந்தியா ஏற்படுத்தி வருகிறது என ஜப்பான் மாநாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி டோக்கியோவில் இந்தியர்கள் மத்தியில் இவ்வாறு பேசினார்.
 | 

உலக அடையாளமாக மேக் இன் இந்தியா மாறியுள்ளது: ஜப்பானில் பிரதமர் மோடி பேச்சு

டிஜிட்டல் கட்டமைப்பு மேம்பாடு, மென்பொருள் வளர்ச்சியின் மையமாக திகழ்வது என பல மாற்றங்களை இந்தியா ஏற்படுத்தி வருகிறது என ஜப்பான் மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதமாக பேசினார். 

இந்திய - ஜப்பான் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் சென்றடைந்தார். இதற்காக டோக்கியோ சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  அங்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கிய 2 நாள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். 

பின்னர் மோடி மேற்கு டோக்கியோவில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மலைகளால் சூழப்பட்ட யமனாஷி நகருக்கு சென்றார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் சொந்த ஊரான மவுண்ட் புஜி ஓட்டலில் மோடியும், ஷின்சோ அபேயும் நேற்று காலை சந்தித்தனர். தொடர்ந்து அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். 

உலக அடையாளமாக மேக் இன் இந்தியா மாறியுள்ளது: ஜப்பானில் பிரதமர் மோடி பேச்சு

தொடர்ந்து, இன்று காலை பிரதமர் மோடி ஜப்பானில் வாழும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ''தீபாவளி வெளிச்சம் போல் இந்தியர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளனர். இவர்கள் பல்வேறு நாடுகளில் இருந்துகொண்டு நமது நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். மிகப்பெரும் மாற்றத்தை கடந்து இந்தியா சென்று கொண்டிருக்கிறது. மனித நேயத்தோடு இந்தியா செய்யும் முயற்சிகளை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன. 

டிஜிட்டல் உட்கட்டமைப்பு துறையில் இந்தியா மிகப்பெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது. கிராமங்கள் வரை பிராட்பேண்ட் இணைப்பு உள்ளது. 100 கோடிக்கும் மேலான செல்போன் இணைப்புகள் இந்தியாவில் செயல்பாட்டில் உள்ளன. சிறிய குடுவை குளிர்பானத்தை விட 1 ஜிபி டேட்டா  மலிவாக உள்ளது. டேட்டா சேவை விநியோகத்திற்கு முக்கிய கருவியாக உள்ளது. 

மேக் இன் இந்தியா, சர்வதேச உள்நாட்டு தயாரிப்பு பிராண்ட் ஆக தற்போது மாறியுள்ளது. தரமான பொருட்களை தற்போது நாங்கள், எங்களுக்காக மட்டுமில்லை, உலகத்திற்காகவும் உற்பத்தி செய்கிறோம். அதற்கு முனையமாக இந்தியா மாறியுள்ளது. குறிப்பாக மின்னணு, ஆட்டோ மொபைல் உற்பத்தியில் இந்தியா சர்வதேச உற்பத்தி முனையாக மாறியிருக்கிறது. மொபைல்போன் உற்பத்தியில் நம்பர்.1 என்ற இடத்தை நோக்கி இந்தியா வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

ஆராய்ச்சிகளிலும் மேம்பாட்டுக் கொண்டே இருக்கிறோம்.  கடந்த ஆண்டு 100-க்கும் மேற்பட்ட செயற்கைகோள்களை ஒரே நேரத்தில் விண்ணுக்கு அனுப்பி நமது விஞ்ஞானிகள் புதிய சாதனையை நிகழ்த்தினர். சந்திராயன் மற்றும் மங்கள்யான் ஆகிய விண்கலங்களை நாங்கள் மிக குறைந்த விலையில் அனுப்பியுள்ளோம். தொடர்ந்து ககன்யான் என்ற விண்கலத்தை 2022-ல் விண்ணுக்கு அனுப்ப இந்தியா தயாராகி வருகிறது'' என்று மோடி பெருமிதமாக பேசினார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP