கிம் ஜோங் உன் சகோதரர் கொலை வழக்கு... குற்றம்சாட்டப்பட்ட பெண் திடீர் விடுதலை!

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோங் நாம் மலேசிய விமான நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் மலேசிய அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 | 

கிம் ஜோங் உன் சகோதரர் கொலை வழக்கு... குற்றம்சாட்டப்பட்ட பெண் திடீர் விடுதலை!

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோங் நாம் மலேசிய விமான நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் மலேசிய அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோங் நாம் அரசியலில் இஷ்டமில்லாமல், நடத்தை விட்டு வெளியேறினார். 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம், மலேசியா விமான நிலையத்தில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டார். அவர் மீது ரசாயன திரவத்தை யார் வீசிச் சென்றதால், அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில், சிசிடிவி கேமரா மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த ஐசியா மற்றும் வியட்நாமை சேர்ந்த டோவான் தி ஹுவாங் ஆகிய இரண்டு பெண்களும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும், தங்களிடம் மர்ம நபர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக திரவத்தை கொடுத்து, கிம் ஜோங் நாம் மீது வீசச் சொன்னதாகவும், அது ஆபத்தான ரசாயன திரவம் என்று தெரியாமல் இவ்வாறு செய்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த வழக்கு மலேசிய நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்தோனேசிய பெண் ஐசியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை திரும்பப்பெறுவதாக மலேசிய வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இது ஐசியா உட்பட அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. 

இதனால் தற்போது அவர் விடுவிக்கப்பட்டு சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுகிறார். வழக்கின் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு வியட்நாம் பெண் டோவான் தி ஹுவாங், நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை இன்று அளிக்க இருக்கிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP