ரஷ்யா செல்கிறார் கிம் ஜோங் உன்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த, வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் மாஸ்கோ செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த மாதம் அவர் ரஷ்யா செல்லலாம் என ரஷ்யாவின் தென் கொரிய தூதர் தெரிவித்துள்ளார்.
 | 

ரஷ்யா செல்கிறார் கிம் ஜோங் உன்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் மாஸ்கோ செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த மாதம் அவர் ரஷ்யா செல்லலாம் என ரஷ்யாவின் தென் கொரிய தூதர் தெரிவித்துள்ளார். 

நீண்ட காலமாக கிம் குடும்பத்தின் தலைமையில் வடகொரியா சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார் கிம் ஜோங் உன். இரு நாடுகளிடையே நிரந்தர அமைதிக்கான தீர்வை காணவும், சர்வதேச அளவில், வடகொரியாவின் போக்கை மாற்றவும் அவர் திட்டமிட்டார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் சந்தித்து கிம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினையும் சந்திக்க கிம் திட்டமிட்டுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பு என்று நடக்குவுள்ளது, எந்த தேதி என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இதுகுறித்து பேசிய ரஷ்யாவுக்கான தென் கொரிய தூதர் வூ யூன்-கியூன், "அதிபர் கிம் ஜோங் உன்னை இந்த ஆண்டு முடிவதற்குள் சந்திக்க வேண்டுமென ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. ஆனால்,  சந்திப்பு நடைபெறவிருக்கும் இடம், அதில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து வடகொரிய தரப்பில் இன்னும் முடிவாகவில்லை" என்றார். 

டிசம்பர் மாதம் கிம் ஜோங் உன், தென் கொரியா செல்கிறார். அதற்கு முன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடனனான இரண்டாவது சந்திப்பு ஆகியவை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2019ம் ஆண்டு, புடின் தென் கொரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் வூ உறுதி செய்தார். இந்த சந்திப்பின் போது,  வடகொரியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் கூறினார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP