வங்கதேசத்தில் பத்திரிகையாளர் கொடூரக் கொலை!

வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் பத்தரிகையாளரான சுபர்ணா நோடி என்பவர் அவரது வீட்டில் கொடூரமான முறையில் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
 | 

வங்கதேசத்தில் பத்திரிகையாளர் கொடூரக் கொலை!

வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் பத்தரிகையாளரான சுபர்ணா நோடி (32) என்பவர் அவரது வீட்டில் கொடூரமான முறையில் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது முன்னாள் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார். 

வங்க தேசத்தில் பெண் நிருபர் அடையாளம் தெரியாத நபர்களால் செவ்வாய்க்கிழமை இரவு அவரது வீட்டில் குத்திக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்தா டிவி என்கின்ற தனியார் செய்தி நிறுவனத்துக்கும், ஜக்ரோதா பங்களா என்கின்ற செய்தி தாளுக்கும் சுபர்ணா வேலை செய்து வந்துள்ளார். டாக்காவில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ள பாப்னா மாவட்டத்தில் ராதாநகர் பகுதியில் அவர் வசித்து வந்தார். சமீபத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்த இவர், விவாகரத்து கோரி தனது 9 வயது குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 10.45 மணியளவில், கத்தியால் நோடி குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரவு நேரத்தில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்ட நிலையில், கதவை திறந்த சுபர்ணாவை மர்ம நபர்கள் படுகொலை செய்துள்ளனர். சத்தம் கேட்டு சுபர்ணா வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், அவரை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றுள்ளனர். அவர் முன்னரே இறந்துவிட்டதாக மருத்துவமனையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொலையாளிகளைப் பிடிக்க காவல்துறை தரப்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே நோடியின் மரணத்தில் சந்தேகத்தின் பேரில், அவரது முன்னாள் கணவரின் தந்தை விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.   

நோடியின் மரணத்துக்குப் பத்திரிகையாளர்கள் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். வங்கதேசத்தில் பத்திரிகையாளர்கள் படுகொலை சம்பவம் அவ்வப்போது நிகழ்வது தொடர் கதையாக உள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP