ரோஹிங்கியர்களுக்காக சர்வதேச நாடுகள் அழுத்தம் தருக: வங்கதேசம் அழைப்பு 

ரோஹிங்கிய அகதிகள் தங்களது நாட்டில் தங்களுக்கான உரிமைகளுடன் வாழ மியான்மருக்கு சார்வதேச நாடுகள் அனைத்தும் அழுத்தம் தர வேண்டும் என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 | 

ரோஹிங்கியர்களுக்காக சர்வதேச நாடுகள் அழுத்தம் தருக: வங்கதேசம் அழைப்பு 

ரோஹிங்கியர்கள் தங்களது நாட்டில் தங்களுக்கான உரிமைகளுடன் வாழ மியான்மருக்கு சார்வதேச நாடுகள் அனைத்தும் அழுத்தம் தர வேண்டும் என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா வலியுறுத்தியுள்ளார். 

வங்காளதேசத்  தலைநகர் டாக்காவில் இஸ்லாமிய சமூக அபிவிருத்தி வங்கியின் கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா பங்கேற்று பேசியபோது, '' வங்கதேசத்தில் ரோஹிங்கியர்களுக்கு வாழ்விடம் அமத்து தருவதால் இங்குள்ள வளங்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற பிரச்னைகளால் அது உள்ளூர் மக்களிடம் எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கும் என்பதை தெரிந்தும் நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் அகதிகளுக்காக எல்லையை திறந்து விட்டோம். லட்சக்கணக்கான அகதிகள் தங்குவதற்கு வசதியாக முகாம்கள் அமைத்து கொடுத்தோம்.

7 லட்சத்திற்கும் மேலான அகதிகள் மியான்மரில் இருந்து வாங்கதேசத்திற்கு வந்துள்ளனர். அவர்களை பராமரிக்க எங்கள் அரசுக்கு சிரமமாக உள்ளது. இப்போது மியான்மரில் சுமூக நிலை திரும்பியுள்ளதால் அகதிகள் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். எனவே ரோஹிங்கியா அகதிகள் மீண்டும் தாயகம் திரும்ப உலக நாடுகள் அனைத்தும் மியான்மர் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

வங்கதேசம் மற்றும் மலேசியாவில் உள்ள அகதிகள் இரண்டு மாதத்தில் மீண்டும் தங்களது நாடு திரும்ப கடந்த நவம்பர் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் அந்தப் ஒப்பந்தத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை'' என்றார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP