இந்தோனேசிய விமானத்தின் முக்கிய பாகம் கண்டுபிடிப்பு ?

இரு தினங்களுக்கு முன் விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தை தேடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், விமானத்தின் பிரதான பாகம் இன்று கண்டுபிடிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

இந்தோனேசிய விமானத்தின் முக்கிய பாகம் கண்டுபிடிப்பு ?

இரு தினங்களுக்கு முன் விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தை தேடும் பணிகள் முழு வீச்சில்  நடைபெற்று வரும் நிலையில், விமானத்தின் பிரதான உடல் பாகம் இன்று கண்டுபிடிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த திங்களன்று, இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து பங்கல் பினாங் நகருக்கு சென்றுகொண்டிருந்த பயணிகள் விமானம், விபத்துக்குள்ளானது. ஜகார்தாவில் இருந்து கிளம்பி வெறும் 13 நிமிடங்களிலேயே, விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. 181 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என அனைவருமே இந்த சம்பவத்தில் உயிரிழந்ததாக கருதப்படுகின்றனர். 

விபத்தை தொடர்ந்து, ஜாவா கடலில், மீட்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். விமானத்தின் உடைந்த பாகங்கள், பயணிகளின் உடல் பாகங்கள், சேதமடைந்த உடமைகள் உள்ளிட்ட பலவற்றை மீட்டு, ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். விபத்துக்குள்ளான லயன் ஏர்லைன்ஸ் விமானம், முந்தைய நாள் பயணத்தின் போதே, சில பிரச்னைகளை எதிர்கொண்டதாக தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து, லயன் ஏர்லைன்ஸின் இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார் இந்தோனேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர். 

பியூசிலாஜ் எனப்படும் விமானத்தின் பிரதான உடற்பகுதியை கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் உள்ள கருப்பு பெட்டியை வைத்தே, கடைசி நிமிடங்களில் விமானத்தில் என்ன நடந்தது என கண்டுபிடிக்க முடியும். இந்நிலையில், சோனார் தொழில்நுட்பம் மூலம், விமானத்தின் பியூசிலாஜ் போன்ற பாகத்தை கண்டுபிடித்துள்ளதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தோனேசிய ராணுவ கமேண்டர் ஹாடி ஜஜாண்டோ தெரிவித்துள்ளார். மீட்புப் படையினர் அந்த பகுதிக்கு சென்று தேடிய பின்னர், இன்று மாலை இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP