Logo

இந்தோனேசிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை கடுமையாக உயரும்!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் பலியனோர் எண்ணிக்கை 1763 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 5000க்கும் அதிகமாக உள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
 | 

இந்தோனேசிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை கடுமையாக உயரும்!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் பலியனோர் எண்ணிக்கை 1763 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 5000க்கும் அதிகமாக உள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கடந்த மாத இறுதியில், இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளிகளாக இந்த நிலநடுக்கம் பதிவானது. இதைத் தொடர்ந்து, சுனாமி அலைகள் உருவாகி, இந்தோனேசிய கடலோர பகுதிகளுக்குள் புகுந்தன. நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் பல்வேறு ஊர்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதில் பலியானோர் எண்ணிக்கை தினம் தினம் உயர்ந்து வந்த நிலையில், தற்போது 1763ஆக உள்ளது என இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 5000ஐ கடந்துள்ளதாகவும் இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது. "இதுவரை கண்டுபிடிக்கப்படாதவர்கள் காணாமல் போனதாக கருதப்படுகிறார்கள்" என பேரிடர் மீட்புப் படையின் செய்தித் தொடர்பாளர் நுக்ரோகோ தெரிவித்துள்ளார். கிராம பகுதிகளை முழுவதும் ஆய்வு செய்த பின் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் அவர் கூறியுள்ளார். 

பல பகுதிகளில் நிலநடுக்கத்தால், மண் தளர்ந்து, கட்டிடங்கள் மற்றும் வீடுகள் பூமிக்குள் சென்றன. பலு பகுதியில் உள்ள பெடோபா எனும் ஊரில், 2050 வீடுகள் இதுபோல பூமிக்குள் சென்றதாக தெரிகிறது. இங்கு தான் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாம்.

படுகாயமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,632 என்றும், சுமார் 62,000 பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP