இந்தோனேசியா: இசை கச்சேரியை அடித்துச் சென்ற சுனாமி (வீடியோ)

இந்தோனேசியாவில் சுனாமி தாக்கி நூற்றுக்கணக்கானோர் பலியான நிலையில், கடற்கரைக்கு அருகே நடந்து கொண்டிருந்த இசை கச்சேரியை சுனாமி அடித்துச் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.
 | 

இந்தோனேசியா: இசை கச்சேரியை அடித்துச் சென்ற சுனாமி (வீடியோ)

இந்தோனேசியாவில் சுனாமி தாக்கி நூற்றுக்கணக்கானோர் பலியான நிலையில், கடற்கரைக்கு அருகே நடந்து கொண்டிருந்த இசை கச்சேரியை சுனாமி அடித்துச் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவின் அனக் கிரகடோவா எரிமலை நேற்று வெடித்ததால் உருவான சுனாமி தாக்கி 222 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இரவு 9.30 மணிக்கு எந்த எச்சரிக்கையும் வராத நிலையில் சுனாமி தாக்கியதால், பொதுமக்கள் பலர் இதில் பலியாகியுள்ளனர். இந்நிலையில், இந்தோனேசிய கடலோர பகுதியில் நடைபெற்ற ஒரு இசை கச்சேரியை சுனாமி அடித்துச் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.

பி.எல்.என் எனப்படும் அந்நாட்டின் மின்சார வாரியத்தின் சார்பில், அதன் ஊழியர்களுக்கு புதுவருட பார்ட்டி கொடுக்கப்பட்டது. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசைக் கச்சேரியில், பிரபல இந்தோனேசிய இசை கலைஞர்கள் பாட்டு பாடிக் கொண்டிருந்த போது, அலைகள் மேடையை தகர்த்து, அனைவரையும் அடித்துச் சென்றது. அந்த இசைக்குழுவை சேர்ந்த 4 பேர், அலைகளில் மூழ்கி பலியானார்கள். '17' என அழைக்கப்படும் அந்த இசைக்குழுவின் பாடகர் இஃபான், இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்தார். மேலும் இருவரை காணவில்லை எனவும் அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து பி.எல்.என் வெளியிட்ட அறிக்கையில், தங்களது ஊழியர்கள், ஊழியர்களின் குடும்பத்தினர் என 29 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP