இந்தோனேஷிய நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு!

இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகளில் புத்தாண்டன்று ஏற்பட்ட நிலச்சரிவுகளால், பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
 | 

இந்தோனேஷிய நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு!

இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகளில் புத்தாண்டன்று ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளால், பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேஷியாவின் சுகபூமி பகுதியில், புத்தாண்டு தினத்தன்று பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. மேற்கு ஜாவா தீவு பகுதியை சேர்ந்த சிமபக் என்ற ஊரில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளால், அப்பகுதியை சேர்ந்த பலர் காணாமல் போனார்கள். இந்தோனேஷிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு படை மற்றும் அவசர உதவி குழுக்கள் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

நேற்று, பல உடல்கள் நிலச்சரிவுகளில் இருந்த மீட்கப்பட்ட நிலையில், பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. ஒருவரை தவிர காணாமல் போனவர்களின் உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த மாதம், இந்தோனேசியாவின் அனக் கிரக்கட்டு எரிமலை வெடித்ததை தொடர்ந்து, கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் சுனாமி அலைகள் எழுந்து, இந்தோனேசிய கடலோர பகுதிகளை தாக்கியது. இதில் 429 பேர் இறந்தனர்.  

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP