இந்தோனேசியா நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தோனேசியாவின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 347 ஆக அதிகரித்துள்ளது.
 | 

இந்தோனேசியா நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தோனேசியாவின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 347 ஆக அதிகரித்துள்ளது.

அதிகமான தீவுகளைக் கொண்ட ஆசிய நாடான இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். வெளிநாட்டு சுற்றுலாவாசிகளை பெரிதும் ஈர்க்கும் இடங்களான  அந்நாட்டின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் சமீபத்தில் 7 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.இதன் தாக்கம் கிழக்கு மற்றும் வடக்கு பாலி, கிழக்கு ஜாவா, தென்கிழக்கு மடுரா, தெற்கு கலிமண்டன், தெற்கு சுலவேசி ஆகிய இதர பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது. இதனால் கடலோர பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், வீடுகள் சேதம் அடைந்தது.

கடலுக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்தோனேசிய அரசு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்தது. பின்னர் சில மணி நேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 347 ஆக அதிகரித்துள்ளது எனவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP