இந்தோனேஷியா: மீண்டும் சுனாமிக்கு வாய்ப்பு; 40,000 பேர் இடமாற்றம்!

இந்தோனேஷியாவில் கடந்த வாரம் எரிமலை வெடித்து 430 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், மீண்டும் எரிமலை வெடித்து சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதை தொடர்ந்து, 40,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
 | 

இந்தோனேஷியா: மீண்டும் சுனாமிக்கு வாய்ப்பு; 40,000 பேர் இடமாற்றம்!

இந்தோனேஷியாவில் மீண்டும் எரிமலை வெடித்து சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதை தொடர்ந்து, 40,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தோனேஷியாவின் லம்பங் பகுதியில் உள்ள அனக் கிரேக்கட்டோ எரிமலை கடந்த சனிக்கிழமை வெடித்தது. இதனால் கடலுக்கு அடியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவுகளால் சுனாமி அலைகள் எழுந்தன. இவரை இந்தோனேஷிய கடலோர நகரங்களை தாக்கி பெரும் சேதங்களை ஏற்படுத்தின. சுனாமியால் 430 பேர் பலியாகியுள்ளனர். 7,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தாலும், இன்னும் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு மீட்பு படையினரால் செல்ல முடியவில்லை.

இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் வெடித்த எரிமலை மீண்டும் வெடிக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. இதனால் எரிமலையை சுற்றி அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு பகுதியின் சுற்றளவை ஒரு கிலோமீட்டரில் இருந்து 3 கிலோமீட்டராக அதிகரித்துள்ளனர். மீண்டும் எரிமலை வெடித்து, அதனால் மறுபடியும் சுனாமி அலைகள் உருவாகக் கூடும் என்பதால், கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை 40,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP