ஆப்கான் நிவாரண பணிகளுக்கு இந்தியா துணை நிற்கும் - சுஷ்மா ஸ்வராஜ்

உஸ்பெகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சேர்த்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், போரில் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் மறுசீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு உதவ இந்தியா உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.
 | 

ஆப்கான் நிவாரண பணிகளுக்கு இந்தியா துணை நிற்கும் - சுஷ்மா ஸ்வராஜ்

உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், போரில் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் மறுசீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு உதவுவதில் இந்தியா உறுதியாக உள்ளதாக தெரிவித்தார். 

உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வரும் இந்தியா - மத்திய ஆசிய நாடுகள் - ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தையில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, "ஆப்கானிஸ்தான் தலைமையில், ஆப்கானிஸ்தான் கட்டுப்பாட்டில், அமைதி மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்ற இந்தியா முழுவதும் ஒத்துழைக்கும்" என்று கூறினார்.

மேலும், தீவிரவாதிகளால் அமைதியான மத்திய ஆசிய நாடுகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும், தீவிரவாதிகளின் கொள்கைகளுக்கு நமது சமூகத்தில் இடம் இருக்கக்கூடாது என்றும் தெரிவித்தார். "தீவிரவாதிகள் யார், அவர்களுக்கு ஆதரவளிப்பவர்கள் யார், அவர்களுக்கு நிதி அளிப்பவர்கள் யார்" என நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP