இந்தியா-கம்போடியா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

இந்தியா-கம்போடியா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது
 | 

இந்தியா-கம்போடியா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

 

இந்தியா வந்துள்ள கம்போடிய பிரதமர் சாம்டெக் ஹுன் சென் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை மேம்படுத்துவது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். 

தொடர்ந்து இந்தியா, கம்போடியா இடையே ராணுவ பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்டவை தொடர்பாக 4 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. கம்போடியாவின் நீர் ஆதாரத் திட்டத்துக்கு இந்தியா 350 கோடி ரூபாய் நிதி வழங்கும் ஒப்பந்தமும் இதில் அடங்கும். 

இதுகுறித்து இரு நாட்டு பிரதமர்களும் பேட்டியளிக்கையில், "உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக பயங்கரவாதம் இருந்து வருகிறது. பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா, கம்போடியா இணைந்து செயல்படும். கம்போடியா நாட்டுடனான உறவை வலுப்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது. பொருளாதாரம், சமூக வளர்ச்சி, வர்த்தகம், கலாச்சாரம், சுற்றுலா, வேளாண்மை என அனைத்து துறைகளிலும் கம்போடியா நாட்டுனான உறவை வலுப்படுத்த இந்தியா முயற்சி செய்யும். 

இரு நாட்டின் பொருளாதாரமும் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு அளிக்கும்" என தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP