Logo

கடவுள் இருப்பதை நிரூபித்தால் உடனே பதவி விலகுவேன்: பிலிப்பைன்ஸ் அதிபர் 

''கடவுள் இருப்பதை யாரேனும் நிரூபித்தால் அடுத்த வினாடியே, தனது பதவியை ராஜினாமா செய்துவிடுவதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடேர்டே பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 | 

கடவுள் இருப்பதை நிரூபித்தால் உடனே பதவி விலகுவேன்: பிலிப்பைன்ஸ் அதிபர் 

''கடவுள் இருப்பதை யாரேனும் நிரூபித்தால் அடுத்த வினாடியே, தனது பதவியை ராஜினாமா செய்துவிடுவதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடேர்டே பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சர்ச்சைப் பேச்சுக்கு பெயர்போன பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடேர்டே, கடவுள் குறித்து சர்ச்சைக் கருத்துகளை அவ்வப்போது பேசி வருகிறார். 

இந்த நிலையில் நேற்று, பிலிப்பைன்ஸில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், "கடவுள் இருக்கிறார் என்ற கருத்து எங்கிருந்து வந்தது. கடவுள் இருக்கிறார் என்பதற்கு, ஏதாவது ஒரு சிறிய ஆதாரத்தைக் காட்டுங்கள் அல்லது புகைப்படத்தை வெளியிடுங்கள். மனிதனால் கடவுளிடம் பேச முடிந்தாலோ அல்லது பார்க்க முடிந்தாலோ, நான் அதிபர் பதவியை உடனே ராஜினாமா செய்து விடுகிறேன்" என்றார். 

தனது அதிரடி நடவடிக்கைகளாலும், சர்ச்சைக்குரிய கருத்துக்களாலும், உலக நாடுகள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருபவர் பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடேர்டே. போதை மருந்து கடத்துபவர்களை கண்டவுடன் சுட உத்தரவிட்டார். தன் கையாலேயே அவர்களை கொலை செல்வேன் என்று பலமுறை பொதுமக்கள் மத்தியில் கூறியுள்ளார். இது போல, கடவுள் குறித்த தனது நிலைப்பாட்டினை பொது நிகழ்வுகளில் பேசுவது, பெண்களை அவமதிக்கும் வார்த்தைகளை உபோயோகிப்பது என டுடேர்டேவின் சர்ச்சைக்கு அளவே இல்லை என்பது குறிப்பிடத்தகது

தொடர்புடையவை: ஐ.நா. அதிகாரிக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் மிரட்டல்!

பிலிப்பைன்ஸ் அதிபர் மனநல மருத்துவரை பார்க்க வேண்டும்: ஐ.நா மனிதஉரிமை தலைவர்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP