"காப்பாற்றுங்கள்!!" இந்தியா உதவி கோரும் மாலத்தீவு எதிர்க்கட்சிகள்

மாலத்தீவுகள் சர்ச்சை; இந்திய உதவி கேட்கும் எதிர்க்கட்சிகள்
 | 

"காப்பாற்றுங்கள்!!" இந்தியா உதவி கோரும் மாலத்தீவு எதிர்க்கட்சிகள்

"காப்பாற்றுங்கள்!!" இந்தியா உதவி கோரும் மாலத்தீவு எதிர்க்கட்சிகள்

கடும் பிரளயத்திற்கு நடுவே இருக்கும் மாலத்தீவுகள் அரசியல் நிலையில் குறுக்கிட்டு, ஜனநாயகத்தை மீட்க இந்திய உதவியை கோரியுள்ளார் மாலத்தீவுகள் எதிர்கட்சித் தலைவர் முஹம்மது நஷீத்.

மாலத்தீவுகள் அதிபர் அப்துல்லா யமீன், எதிர்கட்சியினரை தொடர்ந்து கைது செய்து வந்தார். அதற்கு குறுக்கே நின்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட பலரையும் கைது செய்தார். தற்போது, அரசியல் சாசனத்தை மீறி,  முழு அதிகாரத்தையும் தன் வசம் எடுத்துள்ள அவரை தடுத்து நிறுத்த மாலத்தீவுகள் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் அதிபர் நஷீத்  இந்தியா உதவியை கோரியுள்ளார்.

இந்தியா தனது தூதர்களையும், ராணுவத்தையும் அனுப்பி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார். சில வருடங்களுக்கு முன், அதிபர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டு, பின்னர் தீவிரவாத குற்றச்சாட்டுகளுக்கு நஷீத் ஆளாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

13 வருடங்கள் சிறை தண்டனை பெற்ற அவர், தற்போது பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார். அதிபர் யமீனின் அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் அவர், மாலத்தீவுகளுக்கு வழங்கி வரும் நிதியுதவியை நிறுத்தக் கோரி, அமெரிக்காவையும் வலியுறுத்தியுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP