மாலத்தீவுகளில் மேலும் ஒரு மாதத்திற்கு அவசர நிலை

மாலத்தீவுகளில் மேலும் ஒரு மாதத்திற்கு அவசர நிலை
 | 

மாலத்தீவுகளில் மேலும் ஒரு மாதத்திற்கு அவசர நிலை


மாலத்தீவுகள் நாட்டின் அதிபர் அப்துல்லா யமீன் அவசர நிலையை பிரகடனப்படுத்திய நிலையில், அது இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், மேலும் ஒரு மாதத்திற்கு அவசர நிலையை தொடர ஓட்டளிக்க நாடாளுமன்றம் முயன்று வருகிறது.

தனக்கு எதிராக சதி நடப்பதாக கூறி பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்த மாலத்தீவுகள் அதிபர் யமீன், எதிர்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள் என பலரை கைது செய்தார். இதற்காக அவர் இந்த மாதம் 5ம் தேதி அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். அதன்பிறகு எதிர்கட்சியை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டார்கள்.

அவரின் முடிவு உலகம் முழுக்க விமர்சனங்களை எழுப்பியுள்ள நிலையில், தற்போது மேலும் 30 நாட்களுக்கு அதை நீடிக்க முயற்சிகள் நடந்து வருகிறது. யமீன் தலைமையிலான ஆளும் கட்சி எம்.பி.க்கள், நாடாளுமன்ற கமிட்டியில், அவசர காலத்தை நீட்டிக்கும் மசோதாவை நிறைவேற்றினர். ஆனால், அதை நாடாளுமன்ற சபையில் நிறைவேற்ற முடியாது என கூறப்படுகிறது.

85 உறுப்பினர்கள் கொண்ட மாலத்தீவுகள் நாடாளுமன்றத்தில், 43 ஓட்டுக்கள் இருந்தால் இந்த மசோதா நிறைவேறும். ஆனால், தற்போது வரை அவருக்கு ஆதரவாக 39 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். 43 பேர் இல்லாத பட்சத்தில் இந்த மசோதா நிறைவேறாது என எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில், அதை முறியடிக்கும் விதமாக புதிய யுக்தியை கையாள ஆளும் கட்சி முயன்று வருகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP