தேர்தல் முடிவை ஒத்துக்கொள்ள முடியாது: சர்ச்சைக்குரிய மாலத்தீவுகள் அதிபர்

மாலத்தீவுகள் அதிபர் தேர்தலில் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து, தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் அந்நாட்டு அதிபர் அப்துல்லா யமீன்.
 | 

மாலத்தீவுகளில், சில மாதங்களுக்கு முன்பு சர்வாதிகார ஆட்சி செய்தவர் அதிபர் அப்துல்லா யமீன். தனக்கு எதிராக சென்ற அரசு அதிகாரிகள் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரை பாரபட்சம் பார்க்காமல் அனைவரயும் கைது செய்து சிறையில் அடைத்தார். இதனால் அந்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்தது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் நடந்த தேர்தலில், யமீன் படுதோல்வி அடைந்தார். 16% வாக்குகள் அதிகம் பெற்று, தேர்தலில் வெற்றி பெற்றார் இப்ராஹிம் முஹம்மது சோலிஹ்.

தேர்தலை தொடர்ந்து மக்களின் முடிவை ஏற்றுக்கொண்ட யமீன், அதன் பின் வாக்குபதிவில் மோசடி நடந்ததாக குற்றம் சாட்டினார். இந்நிலையி, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். பல இடங்களில் தேர்தல் மோசடி நடந்ததாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளதாக தெரிவித்து, தேர்தல் முடிவை ஏற்க மறுத்துள்ளார். அடுத்த மாதம் 17ம் தேதியோடு, யாமீனின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில், வேறு வழியில்லாமல் இப்படி ஒரு வழக்கை அவர் தொடுத்துள்ளார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 

இந்த வழக்கை ஏற்பது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்னும் முடிவெடுக்கவில்லை என கூறப்படுகிறது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP