உலுக்கிய நிலநடுக்கம்: அசராது தொழுகையை கடைபிடித்த இந்தோனேசிய இமாம்! - (வைரல் வீடியோ)

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய போதும் கண்னைக் கூட திறக்காமல் தொழுகையை தொடரும் இமாம் ஒருவரின் வீடியோக் காட்சி இணையத்தில் வைரலாக பரவுகிறது.
 | 

உலுக்கிய நிலநடுக்கம்: அசராது தொழுகையை கடைபிடித்த இந்தோனேசிய இமாம்! - (வைரல் வீடியோ)

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய போது, கண்னைக் கூட திறக்காமல் தொழுகையை தொடரும் இமாம் ஒருவரின் வீடியோக் காட்சி இணையத்தில் வைரலாக பரவுகிறது. 

இந்தோனேசியாவில் அதிக அளவிலான நிலநடுக்கம் மற்றும் எரிமலை சீற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர்  இந்தோனேசியாவின் லாம்பாக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆக அந்த நிலநடுக்கம் பதிவானது. பூமியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இரு திநங்களுக்கு முன் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை இன்று திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 145ஐ எட்டியுள்ளது.  சுமார் 80% வீடுகள் லாம்போக் தீவில் நாசமாகியுள்ளது. 

இதனிடையே, லாம்போக் தீவை ஒட்டிய பாலி தீவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அப்போது பாலி தீவில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகை நடந்துகொண்டிருந்த நேரம்.  மசூதியில் தொழுகையை அங்கிருந்த மதக்குரு முன்னின்று நடத்த தொடங்கிய போது திடீரென்று நிலநடுக்கத்தால் மசூதி ஆடத்  தொடங்கியது. 

இதனால் தொழுகையில் இருந்தவர்கள் நிற்க முடியாமல் தடுமாறினர். சிலர் அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர். ஆனால் அப்போதும் அந்த இமாம் தொழுகையை நிறுத்தவில்லை. தன் கைகளை சுவரில் ஊன்றியபடி தொழுகையைத் தொடர்ந்தார். கட்டிடம் மெல்ல மெல்ல பலமாக ஆட தொடங்கியது. 
ஆனால் இமாம் ஒருகணம் கூட கண்விழித்து பார்க்காமல் தொழுகையை நிறுத்தாமல் சுவரில் கை ஊன்றியப்படியே தொடர்ந்தார்.  இவை அனைத்தையும் அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்ஃபோனில் பதிவு செய்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.  அந்த இமாமின் தொழுகை வீடியோ இணையத்தில் பரவலாகி வருகிறது. 

அந்த வீடியோவை பார்க்கும்போது, அவருடன் உடன் தொழுகையில் இருந்தவர்கள், கட்டிடம் அதிரத் தொடங்கியதும் வெளியேறுகின்றனர். ஆனால் இமாம் அசராததைக் கண்டு, சிலர் மீண்டும் வந்து தொழுகையில் இணைகின்றனர். இந்தக் காட்சியை இணையத்தில் பார்த்த பலரும் தங்களுக்கு அழுகை வந்துவிடுவதாக உணர்ச்சியின் மிகுதியில் கருத்துப் பதிவிடுகின்றனர்.

 
 
 
 
 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP