ஆசிய பசிபிக்கில்  நிலநடுக்கம்: ஆஸ்திரேலிய தீவுகளில் சுனாமி எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய தீவுகளான நியூ கலிடோனியா, ஃபிஜி, வனாடு ஆகியவைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 | 

ஆசிய பசிபிக்கில்  நிலநடுக்கம்: ஆஸ்திரேலிய தீவுகளில் சுனாமி எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய தீவுகளான நியூ கலிடோனியா, ஃபிஜி, வனாடு ஆகியவைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லயோலிட்டி தீவுகளுக்கு அருகே சுமார் 231 கிலோ மீட்டர் தொலைவில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  கடலுக்கு அடியே 27 கிலோமீட்டர் (17 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை ஆஸ்திரேலியா அருகில் நியூ கலிடோனியா கடல்பரப்புளும் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 0.3 முதல் 1 மீட்டர் வரை உயரத்துக்கு கடல் அலைகள் உயர்ந்துள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

நியூ கலிடோனியாவின் கடலோரப் பகுதிகளில் இரண்டு இடங்களில் 16-17 சென்டிமீட்டர் (6.3-6.7 அங்குலம்) உயரத்திற்கு சுனாமி அலைகள் எழுந்துள்ளதாக பதிவாகின. இந்த அளவுகளில் சேதம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனை அடுத்து அதிகாரபூர்வ சுனாமி எச்சரிக்கை அங்கு விடுக்கப்பட்டது.

நியூ கலிடோனியா முழுவதும் இந்த நிலநடுக்க அதிர்ச்சி கடுமையாக உணரப்பட்டுள்ளதாகவும், தீவிலிருந்து 103 கிலோ மீட்டருக்கு அப்பால் இந்த அதிர்ச்சி குறைந்துள்ளது என்றும் ஆஸ்திரேலிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதே போல, மார்ஷல் தீவுகள், சமோவா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பிற பசிபிக் நாடுகளுக்கு சிறிய அலைகள் குறித்து முன்னறிவிப்பு செய்யப்பட்டன.  நியூசிலாந்தில் பாதிப்பு குறைவாக இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP