அதிக ஹோம் வொர்க் வேண்டாம் - குகையில் சிக்கிய சிறுவன் உருக்கம்!

தாய்லாந்து குகையில் 2 வாரங்களாக சிக்கிக் கொண்டுள்ள சிறுவர்கள், யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் தங்களது பெற்றோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
 | 

அதிக ஹோம் வொர்க் வேண்டாம் - குகையில் சிக்கிய சிறுவன் உருக்கம்!

தாய்லாந்து குகையில் 2 வாரங்களாக சிக்கியுள்ள சிறுவர்கள், யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் தங்களது பெற்றோருக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

தாய்லாந்து குகைக்குள் சிக்கியுள்ள சிறார் கால்பந்து அணி மற்றும் அதன் பயிற்சியாளரை மீட்கும் பணியில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை, மீட்பு பணியில் ஈடுபட்ட கடற்படை வீரர் பலியானது உள்ளிட்ட காரணங்களால் இந்தத் தோய்வு நிலவுகிறது. இந்த நிலையில் குகையில் சிக்கிக் கொண்ட சிறுவர்கள் தங்களது பெற்றோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், ஒரு சிறுவன் தனது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில்,  "அன்புள்ள அம்மா, அப்பா, எனது சிறிய தம்பியே. நீங்கள் யாரும் கவலைப்படாதீர்கள். நாங்கள் உறுதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறோம்.  நாங்கள் வெளியே வந்தால், கொஞ்சம் வறுத்தக் கறியும் காய்கறியும் கொண்டுவாருங்கள். ஆசிரியர்களே எங்களுக்கு அதிகமாக வீட்டுப்பாடம் கொடுக்காதீர்கள். இங்கு மிகவும் குளிராக இருக்கிறது. வேறு ஏதும் பிரச்னை இல்லை" என்று எழுதியுள்ளார். அவனது கடிதம் உத்வேகத்தையும் அவர்களின் மன உறுதியையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. 

அதோடு, சிறுவர்களை குகைக்கு அழைத்துச் சென்ற பயிற்சியாளரும் அந்தச் சிறுவர்களின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "அன்புள்ள பெற்றோர்களே! நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம். மீட்புப் படையினர் எங்களை நலமாகப் பார்த்துக் கொள்கின்றனர். என்னால் முடிந்தவரை இந்தக் குழந்தைகளை நான் பார்த்துக் கொள்வேன்" என்று  குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தக் கடிதங்களை தாய்லாந்து கடற்படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.  

அதிக ஹோம் வொர்க் வேண்டாம் - குகையில் சிக்கிய சிறுவன் உருக்கம்!

தாய்லாந்து நாட்டின் மா சே நகரில் தாம் லுவாங் குகை உள்ளது. சுமார் 10 கி.மீ. நீளம் கொண்ட இந்த குகைக்குள், கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயது வரையான சிறார் கால்பந்து அணியைச் சேர்ந்த 12 பேர் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் அணியின் துணைப் பயிற்சியாளரும் சென்றார். இவர்கள் சென்ற நாளில் இருந்து அங்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து குகையைவிட்டு வெளியேற முடியவில்லை. குகைப்பகுதி முழுவதையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இவர்களை கால்பந்து நிர்வாக குழு தேடி வந்த நிலையில், தாய்லாந்து பேரிடர் மீட்புப் படையினர் இவர்களை தேடியதில், அவர்கள் அனைவரும் குகைக்குள் சிக்கி இருப்பது தெரிந்தது.  

நிலைமை அறிந்த பிரிட்டிஷ் உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் தாய்லாந்துக்கு உதவிக்கரம் நீட்ட, தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்றது. 10 நாட்களாய் குகையில் சிக்கிக் கொண்டிருந்த கால்பந்து அணியின் சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கவே இவ்வளவு நாள் ஆனது. இந்த  நிலையில் சிக்கியிருக்கும் சிறுவர்களை மீட்க சில மாதங்கள் ஆகும் என்று தாய்லாந்து ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு:- 

குகைக்குள் தவிக்கும் சிறுவர்கள்: மீட்க சில மாதங்கள் ஆகும் என்கிறது தாய்லாந்து ராணுவம் 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP