ஆவணப்படமாக மாயமான மலேசிய விமான விபத்து சம்பவம்

மாயமான மலேசிய விமானம் எம்எச் 370 விபத்தில் சிக்கியது குறித்து தத்ரூபமான ஆவணப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
 | 

ஆவணப்படமாக மாயமான மலேசிய விமான விபத்து சம்பவம்

மாயமான மலேசிய விமானம் எம்எச் 370  விபத்தில் சிக்கியது குறித்து தத்ரூபமான ஆவணப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. 

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 239 பயணிகளுடன், சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு, கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டது மலேசியன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான எம்எச் 370 விமானம். சிறிது நேரத்தில் விமானம் மாயமானதாக கூறப்பட்டது. விமானம் குறித்து ஆஸ்திரேலியாவின் விசாரணைக் குழு ஆய்வு செய்யத் தொடங்கியது. கடந்த ஜூன் மாதம் மாயமான விமானத்தின் பாகங்கள் டான்சானியா நாட்டுக் கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

விமான பாகங்களை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, விமானம் திட்டமிட்டே கடலில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த Boeing 777 ரக விமானம் விபத்துக்குள்ளான போது விமானக் கட்டுப்பாட்டு அறையில் யாரும் இருந்ததாக தெரியவில்லை. எனவே விமானியின் திட்டமிட்ட செயலாக இருக்கக்கூடும் என விசாரணைக் குழு அறிவித்துள்ளது. விமானியின் நோக்கம் என்ன, எதற்காக இந்த விபத்தை நிகழ்த்த வேண்டும் என பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த விமானத்தை தேடும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டும் இதுவரை விமானத்திற்கு என்ன நேர்ந்தது என்று கண்டறிய முடியவில்லை. 

இந்த நிலையில் விமானியுடன் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் எம்எச் 370 விமானம் எப்படி விபத்துக்குள்ளாகி இருக்கும் என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு என்ஜின்களும் செயலிழந்ததால் விமானம் நேரடியாக கடலுக்குள் விழுந்து நொறுங்குவது போல் அந்த ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்த வீடியோ காட்சிகள் தத்ரூபமாக எடுக்கப்பட்டு ஆவணப்படமாக ட்ரெயின் தி ஓஷேன்ஸ் என்ற இந்த ஆவணப்படம் நேஷ்னல் ஜியோகிராபிக் சானலில் ஒளிபரப்பாகிறது.  அதற்கு முன் அதன் ட்ரெயிலரே இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP