போப்பாண்டவருக்கு அழைப்பு விடுக்கும் சர்வாதிகாரி கிம் ஜோங் உன்!

போப் பிரான்சிஸ் வடகொரியாவுக்கு வர வேண்டும், என அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் அழைப்பு விடுத்துள்ளார். தென் கொரிய அதிபர் இந்த மாதம் போப்பை சந்திக்கும் போது, கிம் சார்பாக அழைப்பு விடுப்பார் என தெரிகிறது.
 | 

போப்பாண்டவருக்கு அழைப்பு விடுக்கும் சர்வாதிகாரி கிம் ஜோங் உன்!

போப் பிரான்சிஸ் வடகொரியாவுக்கு வர வேண்டும், என அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் அழைப்பு விடுத்துள்ளார். தென் கொரிய அதிபர் இந்த மாதம் போப்பை சந்திக்கும் போது, கிம் சார்பாக அழைப்பு விடுப்பார் என தெரிய வந்துள்ளது. 

வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சி புரிந்து வரும் அதிபர் கிம் ஜோங் உன், கடந்த சில ஆண்டுகளில், உலக நாடுகளுடன் தான் கொண்டிருந்த அணுகுமுறைகளை சிறிது சிறிதாக மாற்றிக் கொண்டு வருகிறார். தென் கொரியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்ற போது, தனது தங்கையை அங்கு அனுப்பி, அமைதி பேச்சுவார்த்தைக்கு வித்திட்டார் கிம் ஜோங் உன். அதைத் தொடர்ந்து, தென் கொரிய அதிபர் மூன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

அணு ஆயுதங்களை கைவிடவும், உலக நாடுகளுடன் சேர்ந்து பணியாற்றவும் கிம் ஜோங் உன் விருப்பம் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், போப் பிரான்சிஸ், வடகொரியாவுக்கு வர வேண்டும் என் கிம் அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்த போது, கிம் இதை தெரிவித்தாராம். இந்த மாதம் அதிபர் மூன், ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார். அப்போது அவர் போப் பிரான்சிஸை சந்தித்துப் பேச உள்ளார். இதுகுறித்து இன்று தென் கொரிய அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், "போப் பிரான்சிஸை வடகொரியாவுக்கு வரவேற்க தயாராக உள்ளதாக அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்" என கூறப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸை அதிபர் மூன் சந்திக்கும் போது, கிம்மின் விருப்பத்தை நேரடியாகத் தெரிவிக்கவுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP