எங்கு காணினும் சடலங்கள்; உயிரிழப்பு 400 ஆனது... இந்தோனேசிய மக்கள் தவிப்பு

இந்தோனேசியாவில் நேர்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பலியானவர்கள் எண்ணிக்கை 400ஐ எட்டியுள்ளது. சுமார் 1,000 கட்டிடங்கள் இடிந்தன, சில பகுதிகளில்எந்த செய்தித் தொடர்பும் இல்லை. இதனால் முழு சேத விவரம் தெரியவில்லை.
 | 

எங்கு காணினும் சடலங்கள்; உயிரிழப்பு 400 ஆனது... இந்தோனேசிய மக்கள் தவிப்பு

இந்தோனேசியாவில் நேர்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பலியானவர்கள் எண்ணிக்கை 400ஐ எட்டியுள்ளது. 

இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள சுலவேசி தீவு சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பிடியில் சிக்கியது. 7 புள்ளி 5 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினர். அதற்கும் மேலாக நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் சுலசேசி தீவை சுனாமி தாக்கியது. இதில் பாலு மற்றும் டோங்க்லா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சுனாமியால் 6 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்து கடலோர பகுதிகளை முழுவதுமாக உள்ளிழுத்துக் கொண்டது.  பாலுவில் திருவிழா நேரம் என்பதால் இங்கு சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். மேலும் பாதுகாப்புக்காக 150 காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக மாயமாகியுள்ளனர். கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே சடலங்கள் பஞ்சம் இல்லாமல் காணப்படுகின்றன. 

பாலு நகரில் 1,000 கட்டிடங்கள் இடிந்தன, டொங்கலாவிலிருந்து எந்த செய்தித் தொடர்பும் இல்லை. இதனால் முழு சேத விவரம் தெரியவில்லை.   பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக சுமார் 400ஐ பலி எண்ணிக்கை தொட்டுள்ளது.

சில இடங்களில் கட்டிதங்கள் முற்றிலுமாய் இடிந்து தரை மட்டமாயுள்ளன. சாலைகளில் பெரும் பிளவுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மருத்துவமனைகள், ஷாப்பிங் செண்டர்களும் விதிவிலக்கல்ல. தொங்காலாவில் ஒரு பெரிய நீளமான பாலம் சுனாமி அலையில் அடித்து செல்லப்பட்டது. பலுவின் டெய்லிஸ் கடற்கரையில் உடல்களும், கடல்நீரின் மேற்பகுதியில் உடல்களும் மிதந்ததாக நேரில் பார்த்தவர் ஒருவர் இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்த போது அவர் முகத்தில் பயம் இன்னமும் அகலவில்லை.

சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் மிகவும் சிரமமான காரியமாக உள்ளது. இடிபாடிகளில் சிக்கி உள்ளவர்களை முற்றிலுமாக மீட்கும் நடவடிக்கை எந்த தருணத்தில் முடிவுக்கு வரும் என்ற தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்க தாக்கத்தால் அதற்கு பின்னான நில அதிர்வுகள் ஆங்காங்கே இருந்துகொண்டே இருக்கின்றன. 

மீட்கப்பட்ட சடலங்களிலும் பெரும்பாலும் அடையாளம் காணப்படாமல் உள்ளது. டொங்காலாவில் பல உடல்கள் கடற்கரையில் சிதறிக்கிடகின்றன.  பலரும் முகநூல் பக்கங்களில் தங்கள் காணாமல் போன உறவினர்கள் படங்களை இட்டு விவரம் தெரிந்தால் தொடர்பு கொள்ள கேட்கின்றனர். இவ்வாறான வேதனை பதிவுகள் சமூக வலைதள பக்கங்களில் குவிந்திருக்கின்றன. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP