‘பட்டுப் பாதை’ திட்டத்தில் ஆப்கானிஸ்தானை இணைக்க சீனா முயற்சி

‘பட்டுப் பாதை’ திட்டத்தில் ஆப்கானிஸ்தானை இணைக்க சீனா முயற்சி
 | 

‘பட்டுப் பாதை’ திட்டத்தில் ஆப்கானிஸ்தானை இணைக்க சீனா முயற்சி


சீனாவின் பட்டுப் பாதை திட்டத்தில் ஆப்கானிஸ்தானையும் இணைக்க சீனா முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. இதே திட்டத்தில் இலங்கை, மியான்மரில் ஒப்பந்த அடிப்படையில் சீனா துறைமுகங்களை நிர்மாணித்து வருகிறது. 

‘பட்டுப் பாதை’ வர்த்தகத்துக்கு மீண்டும் உயிரூட்ட ‘ஒரே மண்டலம், ஒரே பாதை’ என்ற பெயரில் சீனா புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில், பாகிஸ்தானின் குவாதர் நகரில் மிக பிரம்மாண்ட துறைமுகத்தை சீனா நிர்மாணித்துள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்து குவாதர் துறைமுகத்துக்கு பிரம்மாண்ட நெடுஞ்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்தில் ஆப்கானிஸ்தானையும் இணைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இந்த திட்டம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சலாஹுதின் ரப்பானி ஆகியோருடன் வாங் யீ ஆலோசனை நடத்தினார். இதில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கருத்து தெரிவிக்கையில், “ஒரே மண்டலம், ஒரே பாதை திட்டத்தில் ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் இணைக்கப்படும்” என்றார்.

குவாதர் துறைமுக திட்டத்துக்கு போட்டியாக ஈரானின் சாபஹர் நகரில் பிரம்மாண்ட துறைமுகத்தை இந்தியா நிர்மாணித்து வருகிறது. இத்திட்டத்தில் இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் இணைந்து செயல்படுகின்றன. இந்நிலையில் ‘ஒரே மண்டலம், ஒரே பாதை’ திட்டத்தில் ஆப்கானிஸ்தானை இணைக்க சீனா முயற்சி செய்து வருகின்றது. சீனாவின் இந்த முயற்சி இந்தியாவுக்கு தொல்லை கொடுக்கும் ஒரு முயற்சியாகவே கருதப்படுகின்றது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP