தலைமை நீதிபதி கைது; சர்வாதிகாரத்தை நோக்கி மாலத்தீவுகள்

நாட்டின் தலைமை நீதிபதி கைது; சர்வாதிகாரத்தை நோக்கி மாலத்தீவுகள்
 | 

தலைமை நீதிபதி கைது; சர்வாதிகாரத்தை நோக்கி மாலத்தீவுகள்


மாலத்தீவுகள் அதிபர் அப்துல்லா யமீன், தனது அரசியல் எதிரிகளை தொடர்ந்து கைது செய்து வந்ததற்கு உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்று அவர் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இந்நிலையில், இன்று அந்நாட்டின் தலைமை நீதிபதி எந்த காரணமும் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார். 

கட்சியில் இருந்து 12 எம்.பி.க்கள் எதிர்கட்சிக்கு தாவிய நிலையில், தனது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற பயத்தால் அவர்களை தகுதி நீக்கம் செய்தும், கைது செய்யவும் அதிபர் யமீன் உத்தரவிட்டார். இந்த உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தன்னை பதவியை விட்டு நீக்க நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடக்கக்கூடாது என்பதற்காக நாடாளுமன்றத்துக்கு சீல் வைத்து, எதிர்கட்சியினைரை கைது செய்யவும் அதிபர் யமீன் உத்தரவிட்டார்.

இந்நிலையில், தன்னை கைது செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எந்த நேரம் வேண்டுமானாலும் உத்தரவிடலாம் என்ற நிலையில், நாடு முழுவதும் 15 நாட்கள் அவசர நிலையை யமீன் பிரகடனப்படுத்தினார். அதன்பின், தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரையும் கைது செய்ய முழு அதிகாரம் அவருக்கு கிடைத்தது. தற்போது அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா சயீத்தை மாலத்தீவுகள் போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக தனது கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர், மற்றும் தனது சகோதரர் மௌமூன் அப்துல் கையூமையும் கைது செய்ய அதிபர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP