தியானத்தின் மூலம் சிறுவர்களை காத்த பவுத்த துறவி!

தாய்லாந்தில் உள்ள லாம் துவாங் குகைக்குள் கடந்த 2 வாரங்களாக சிக்கித் தவித்த 12 சிறுவர்களை உணவின்றி தியானத்தின் மூலம் பசித்துறக்க வழி செய்திருக்கிறார் சிறுவர்களுடன் சென்ற பயிற்சியாளர்.
 | 

தியானத்தின் மூலம் சிறுவர்களை காத்த பவுத்த துறவி!

தாய்லாந்தில் உள்ள லாம் துவாங் குகைக்குள் கடந்த 2 வாரங்களாக சிக்கித் தவித்த 12 சிறுவர்களை உணவின்றி தியானத்தின் மூலம் பசித்துறக்க வழி செய்திருக்கிறார் சிறுவர்களுடன் சென்ற பயிற்சியாளர். 

தாய்லாந்து நாட்டில் சியாங் ராயில்  உள்ள தாம் லுவாங் என்ற 10 கி.மீ நீளமுடைய குகைக்கு கால்பந்து விளையாட்டு அணி ஒன்று பார்வையிட சென்றனர். கால்பந்து பயிற்சியாளர் மற்றும் 11 முதல் 16 வயதுடைய 12 சிறுவர்கள் ஜூன் 23-ம் தேதி உள்ளே சென்றனர். இஅந்த சமயத்தில் மழை அங்கு தீவிரமடைந்ததால் யாரும் குகையைவிட்டு வெளியே வரமுடியவில்லை.  குகையை விட்டு வெளியே செல்லும் பகுதி முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது.

பின்னர் இவர்களை காணவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டு, கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுற்றியுள்ள பல்வேறு நாடுகளும் சிறுவர்களை தேடும் பணிக்கு உதவின. அவர்களின் சைக்கிள் மற்றும் பொருட்கள், குகைக்கு வெளியே இருந்ததை பார்த்து, சிறுவர்கள் அங்கே சிக்கிக்கொண்டிருப்பது தெரிய வந்தது. 

தியானத்தின் மூலம் சிறுவர்களை காத்த பவுத்த துறவி!

சர்வதேச அளவிலான மீட்புப் படை வீரர்களின் கடுமையான முயற்சியால் ஜூலை 8ம் தேதி 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். கைத் தேர்ந்த வீரர்களின் ஆலோசனைப்படி அடுத்தடுத்தது மற்ற சிறுவர்களும் மீட்கப்பட்டனர். இதனிடையே, வெள்ள நீர் புகுந்த அபாயகராமான குகைக்குள் 2 வாரங்களுக்கும் மேலாக சிறுவர்கள் வாழ்ந்தது எப்படி மற்றும் அவர்கள் உணவின்றி  நாட்களை கழித்தது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. 

பசித் துறக்க செய்த பயிற்சியாளர்: 

கால்பந்தாட்ட சிறார் அணியின் துணைப் பயிற்சியாளர் எக்காபோல் சந்தாவாங் இவர்களுடன் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பவுத்தத் துறவியான எக்காபோல் சிறுவர்களுக்கு பயிற்சிகள் அளித்து சோர்வடையாமல் பார்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 

குகைக்குள் சிக்கிக் கொண்ட சிறுவர்களிடம் ஓரிரு நாட்களுக்குத் தேவையான உணவுகள் மட்டுமே கைவசம் இருந்ததாம். அதை பகிர்ந்து உண்ட சிறுவர்கள் மற்ற நாட்களில் தங்களது பயிற்சியாளரின் வழிகாட்டுதலின்படி தியானத்தின் மூலம் பசித் துறந்து வாழ்ந்துள்ளனர். இவர்கள் குகைக்குள் சிக்கியிருப்பது வெளி உலகுக்கு தெரியவந்த பின்பு பெரும்பாடுபட்டு இவர்களுக்கான உணவுகள் குகைக்குள் அனுப்பப்பட்டது. தகுந்த நேரத்துக்கு அவை உதவினாலும், பயிற்சியாளர் கூறிய வழிமுறை தான் சிறுவர்களை தன்நம்பிக்கையுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கச் செய்துள்ளது. 

உணவு இன்றி 2 வாரங்கள் கழிப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். அத்தகைய மோசமான சூழளில் தியானத்தின் மூலம் சாதுர்யமாக செயல்பட்டிருப்பது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP