தாய்லாந்தில் வெடிகுண்டு தாக்குதல்; 3 பேர் பலி

தாய்லாந்தில் வெடிகுண்டு தாக்குதல்; 3 பேர் பலி
 | 

தாய்லாந்தில் வெடிகுண்டு தாக்குதல்; 3 பேர் பலி


தாய்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள யலா மாகாணம் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். ஏற்கனவே தாய்லாந்து அரசுக்கும் மலேசிய முஸ்லிம்களுக்கும் மோதல் இருந்து வருவதால் இப்பகுதியில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது வழக்கம். 

இந்நிலையில் இன்று பயங்கவராத அமைப்பைச் சேர்ந்த ஒருவன் மோட்டார் சைக்கிளில் வந்து மக்கள் அதிகமுள்ள யலா மாகாணத்தின் மார்க்கெட் பகுதியில் வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான். இந்த வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி மக்கள் 3 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 20க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல், இப்பகுதியில் ஏற்படும் வன்முறைகளால் சுமார் 7 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP