Logo

இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு!

இந்தோனேசியாவின் லயன் ஏர்லைன்ஸ் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதை தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள மீட்புப் படையினர், விமானத்தின் முதல் கருப்புப் பெட்டியை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 | 

கடந்த திங்களன்று, இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து கிளம்பிய லயன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம், 13 நிமிடங்களில் மாயமானது. எந்த அபாய எச்சரிக்கையும் இல்லாமல், விமான நிலையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், விமானம் விபத்துகுள்ளானதாகவும், அதில் பயணம் செய்த 189 பேரும் பலியானதாக கருதப்பட்டது. 

இந்தோனேசிய அரசு முழு வீச்சில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், பயணிகளின் உடல் பாகங்கள், விமானத்தின் பாகங்கள் ஜாவா கடலில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. விமானத்தின் பிரதான உடல் பாகத்தில் உள்ள கருப்பு பெட்டிகளில், விபத்து குறித்த முக்கிய தகவல்கள் இருக்கும் என்பதால், மீட்புப் படையினர் அதை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இரண்டு கருப்பு பெட்டிகளில் ஒன்றை கண்டுபிடித்து விட்டதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். 

ஒரு கருப்பு பெட்டியில், விமானத்தின் தொழில்நுட்ப தகவல்களும், மற்றொன்றில், விமானிகள் பணியாற்றும் 'காக்பிட்'டில் உள்ள தகவல்களும் சேகரிக்கப்படும். இதில் தொழில்நுட்ப தகவல்கள் அடங்கிய கருப்பு பெட்டி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP