பிபிசி பத்திரிகையாளர் கொலை - ஆப்கானியருக்கு மரண தண்டனை

ஆப்கானிஸ்தானின் கோஷ்ட் பகுதியில், பிபிசி நிறுவனத்தின் பத்திரிகையாளர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், முக்கிய குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனையும், 2 பேருக்கு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
 | 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஆப்கான் தலைநகர் காபூலில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. இதில், 9 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடைபெற்ற அதே நாள் கோஷ்ட் பகுதியில், பிபிசி நிறுவனத்தின் பத்திரிகையாளர் அஹ்மத் ஷா மீது சிலர் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் அவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில், போலீசார் 3 பேரை கைது செய்தனர். அவர்களுக்கு எதிராக நடைபெற்று வந்த வழக்கில், 3 பேரும் குற்றவாளிகள் என இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

ஒருவருக்கு மரண தண்டனை விதித்தும், 2 பேருக்கு சிறைத் தண்டனை விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக, ஆப்கான் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP