வங்கதேச தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது; வன்முறையில் 12 பேர் பலி

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே இன்று மாலை முடிவுக்கு வந்தது தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
 | 

வங்கதேச தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது; வன்முறையில் 12 பேர் பலி

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே இன்று மாலை முடிவுக்கு வந்தது. தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

வங்கதேச நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில், பல்வேறு இடங்களில் ஆளும் அவாமி லீக் கட்சியினருக்கும், எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சிக்கும், இடையே ஏற்பட்ட கலவரங்களில் 12 பேர் பலியானார்கள். 3 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே ஏற்பட்ட கலவரங்களில் 8 பேர் கொல்லப்பட்டனர் ஒரு போலீஸ் அதிகாரியும் எதிர்க்கட்சியினர் சிலர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

மாலை 4 மணியளவில் வாக்குப்பதிவு முடிவுக்கு வந்தது. இந்த தேர்தலில், அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா மாபெரும் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும், அவரது அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில், எதிர்க்கட்சியினர் மீது தாக்குதல் நடத்தினர். வெற்றியை உறுதி செய்வதற்காக பிரதமர் செய்யும் சர்வாதிகார நடவடிக்கைகள் தான் இது, என பல்வேறு தரப்பில் இருந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.]

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP