வங்கதேச தேர்தல்: வாக்களித்தார் பிரதமர் ஷேக் ஹசினா!

வங்கதேச நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அந்நாட்டின் பிரதமராக பொறுப்பு வகிக்கும் ஷேக் ஹசினா தமது வாக்கை பதிவு செய்தார். வங்கதேச நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது
 | 

வங்கதேச தேர்தல்: வாக்களித்தார் பிரதமர் ஷேக் ஹசினா!

வங்கதேச நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அந்நாட்டின் பிரதமராக பொறுப்பு வகிக்கும் ஷேக் ஹசினா தமது வாக்கை பதிவு செய்தார்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தின் நாடாளுமன்றத்துக்கான 11 -வது பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

2 கோடி இளைய தலைமுறை வாக்காளர் உட்பட மொத்தம் 10 கோடி பேர் தங்களுக்கான புதிய அரசை தேர்ந்தெடுக்க வாக்களித்து வருகின்றனர்.வங்கதேச பிரதமராக பொறுப்பு வகிக்கும் ஷேக் ஹசினா தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு வாக்குச்சாவடி தனது வாக்கை பதிவு செய்தார்.

தேர்தலையொட்டி நாடு முழுவதும் 40 ஆயிரம் வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. துணை ராணுவத்தினர் உள்ளிட்ட 6 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆளும் அவாமி லீக்,  பிரதான எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) ஆகியவற்றுக்கு இடையே தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.

ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றால், தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு ஹேக் ஹசினாவுக்கு கிடைக்கும்.

பிஎன்பி கட்சித் தலைவரும், வங்கதேசத்தின் பிரதமராக  மூன்று முறை பொறுப்பு வகித்தவருமான கலிதா ஜியா,  ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, கடந்த பிப்ரவரி மாதம் முதல் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP