வங்கதேச தேர்தல்: வதந்தி பரப்பிய 8 பேர் கைது

வங்கதேச நாடாளுமன்ற தேர்தல் குறித்து வதந்தி பரப்பிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். வங்கதேச நாடாளுமன்றத்துக்கான 11 -வது பொதுத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதையொட்டி, தலைநகர் டாக்காவில் ஆயுதப் படை பாதுகாப்பு போடப்பட்டது.
 | 

வங்கதேச தேர்தல்: வதந்தி பரப்பிய 8 பேர் கைது

வங்கதேச நாடாளுமன்ற தேர்தல் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

வங்கதேச நாடாளுமன்றத்துக்கான 11 -வது பொதுத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதையொட்டி,  தலைநகர் டாக்கா உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆயுதப் படை பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த நிலையில், தேர்தல் தொடர்பாக வாக்காளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் சமூக வலைதளங்களிலும், குறுஞ்செய்திகள் மூலமும் வதந்திகள் பரப்பியதாக, தலைநகர் டாக்காவுக்கு உள்பட்ட பகுதிகளில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து மடிகணினி, மொபைல்ஃபோன் உள்ளிட்டவற்றை அதிரடி படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP