விமான விபத்தில் காப்பாற்றப்பட்ட குழந்தை?? வைரலாகும் போலி புகைப்படங்கள்!

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து கிளம்பிய லயன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 189 பேர் இறந்ததாக கருதப்படும் நிலையில், இந்த சம்பவம் குறித்த பல போலி போட்டோக்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
 | 

விமான விபத்தில் காப்பாற்றப்பட்ட குழந்தை?? வைரலாகும் போலி புகைப்படங்கள்!

இந்தோனேசியாவில் இருந்து கிளம்பிய லயன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி, 189 பேர் இறந்ததாக கருதப்படும் நிலையில், விபத்து குறித்த பல போலி போட்டோக்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து, நேற்று கிளம்பிய லயன் ஏர்லைன்ஸ் விமானம், ஜாவா கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் கிளம்பி வெறும் 13 நிமிடங்களிலேயே, விமான நிலையத்துடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. 181 பயணிகள், 8 விமான பணியாளர்கள் என விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இதில் பலியானதாக கருதப்படுகிறது. மீட்புப் படையினர், விமானத்தின் பாகங்களையும், பயணிகளின் உடமைகளையும் அங்கங்கே கண்டுபிடித்து வருகின்றனர். ஆனால், இதுவரை ஒருவர் கூட உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல் இல்லை. 

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்த பல்வேறு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஒரு குழந்தையை மீட்புப் படையினர் உயிருடன் மீட்டதாக புகைப்படம் வெளியானது. இதை சுட்டிக்காட்டிய இந்தோனேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த சுடோபோ புர்வோ நுக்ரோகோ, "தயவு செய்து இதுபோன்ற பொய்களை பரப்பாதீர்கள்" என் கூறினார். முன்னதாக இந்தோனேசியாவில் ஒரு படகு கவிழ்ந்த போது காப்பாற்றப்பட்ட குழந்தையின் புகைப்படம் அது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், விமானத்தில் உள்ள பயணிகள் அலறுவது போன்ற ஒரு வீடியோவும், விமானத்தின் ஆக்சிஜன் உதவியை பயணிகள் பெறுவது போன்ற புகைப்படங்களும் வெளியானது. இவையும் வேறு சம்பவங்களின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என அவர் கூறினார். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP