ஆப்கானிஸ்தான்:  துப்பாக்கிச்சண்டையில் காவல்துறையினர் 6 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் காவல்துறை சோதனைச்சாவடியில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 5 அதிகாரிகள் உட்பட காவல்துறையினர் 6 பேர் உயிரிழந்தனர்.
 | 

ஆப்கானிஸ்தானில் உள்ள தக்கார் மாகாணத்தில் கததவ்ஜா பகாவ்தீன் மாவட்டத்தில், சோதனைச்சாவடியில் காவல்துறையினரை தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். உடனே போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 5 காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஒரு காவலர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தாக்குதலை நடத்திய தலிபான் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி தப்பிச் சென்றனர். 

முன்னதாக, கடந்த சனிக்கிழமை பாராஹ் மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 6 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP