ஆப்கான் குண்டுவெடிப்பு: குழந்தைகள், நிருபர்கள் உட்பட 40 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் காந்தஹாரில் நேற்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 40 பேர் பலியாகியுள்ளார்.
 | 

ஆப்கான் குண்டுவெடிப்பு: குழந்தைகள், நிருபர்கள் உட்பட 40 பேர் பலி

ஆப்கான் குண்டுவெடிப்பு: குழந்தைகள், நிருபர்கள் உட்பட 40 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் காந்தஹாரில் நேற்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 40 பேர் பலியாகியுள்ளார். 

நேற்று காலை தலைநகர் காபூலில் தொடர்ந்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் 9 பத்திரிக்கையாளர்கள் உட்பட 29 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கான் உளவுத்துறை அதிகாரிகள் வாழும் பகுதியில் திடீரென குண்டு வெடித்தது. பைக்கில் வந்த தீவிரவாதி ஒருவன், வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் பத்திரிகையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் என ஊடகவியலாளர்கள் பலர் குவிந்தனர். அவர்கள் அங்கு கூடியிருந்த நேரத்தில், மற்றொரு குண்டு வெடித்தது. பத்திரிகையாளர் போல வேடமணிந்த தீவிரவாதி இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது.  இதில் 9 பத்திரிகையாளர்கள் உயிரிழந்தனர். இந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் மொத்தம் 49 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

இதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் நேட்டோ படைகளின் கான்வாய் ஒன்றை குறிவைத்து மற்றொரு தாக்குதல் நடந்தது. ஆனால், இந்த குண்டுவெடிப்பில், சம்பவ இடத்தின் அருகே உள்ள மதராசாவில் இருந்த 11 குழந்தைகள் பலியானார்கள். காந்தஹார் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இன்னும் பொறுப்பேற்கவில்லை.

இந்த சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி "குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள், மசூதியில் தொழுதவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் போன்ற ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது போர்குற்றமாகும்" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP